இம்ரான் கான் ஆதரவாளர்கள் பேரணியில் மோதல்; போர்க்களமாக மாறிய இஸ்லாமாபாத் - 5 பேர் பலி
பாகிஸ்தான் சிறையில் உள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கானை விடுதலை செய்யக்கோரி பஞ்சாப் மாகாணம் ஹசன் அப்தலில் அவரது ஆதரவாளர்கள் நேற்று (திங்கள்கிழமை) இஸ்லாமாபாத்தை நோக்கி பிரம்மாண்ட பேரணி நடத்தினார். இந்தப் பேரணியில் ஏற்பட்ட மோதலில் 5 பேர் உயிரிழந்தனர்.
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் சிறையில் உள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கானை விடுதலை செய்யக்கோரி பஞ்சாப் மாகாணம் ஹசன் அப்தலில் அவரது ஆதரவாளர்கள் நேற்று (திங்கள்கிழமை) இஸ்லாமாபாத்தை நோக்கி பிரம்மாண்ட பேரணி நடத்தினார். இந்தப் பேரணியில் ஏற்பட்ட மோதலில் 5 பேர் உயிரிழந்தனர்.
ஊடகத் தகவலின்படி போராட்டக்காரர்களால் ஒரு காவலர் சுட்டுக் கொல்லப்பட்டார். அதிரடிப் படையைச் சேர்ந்த 4 வீரர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர். இந்தப் பேரணியில் பலர் காயமடைந்தனர். மேலும் போராட்டக்காரர்கள் போலீஸ் வாகனங்களுக்கு தீ வைத்து எரித்தனர். போராட்டக்காரர்கள் மீது போலீஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முயற்சித்தனர். இதனால் அப்பகுதியே போர்க்களம் போல் காட்சியளித்தது.
What's Your Reaction?