3 ஆண்டுகளில் பறிபோன 1.5 லட்சம் உயிர்கள்: சூடான் வன்முறையின் ரத்தப் பின்னணி!

விவசாய நிலங்கள், எண்ணெய் வளங்கள் அத்தனைக்கும் மேலாக தங்கச் சுரங்கங்கள் என இயற்கை வளங்கள் நிறைந்த சூடான், உள்நாட்டுக் கலவரத்தால் இன அழிப்பு, பசி, பட்டினி, வன்முறை என்று மனிதாபிமான நெருக்கடி மிகுந்த ஒரு நாடாக இருக்கிறது.

Nov 4, 2025 - 14:55
 0  3
3 ஆண்டுகளில் பறிபோன 1.5 லட்சம் உயிர்கள்: சூடான் வன்முறையின் ரத்தப் பின்னணி!

விவசாய நிலங்கள், எண்ணெய் வளங்கள், தங்கச் சுரங்கங்கள் என இயற்கை வளங்கள் நிறைந்த ஆப்பிரிக்க நாடு சூடான். இத்தனை வளங்கள் இருந்தும் உள்நாட்டுப் போரால் இன அழிப்பு, பசி, பட்டினி, வன்முறை என்று அங்கு நிகழும் அவலங்கள் உலகின் மிக மோசமான ‘மனிதாபிமான நெருக்கடி’ கொண்ட நாடாக அதை மாற்றியுள்ளது.

‘ரத்தம் குடிக்கும் அதிகாரப் பசி’ - சூடானில் உள்நாட்டுப் போர் தொடங்கி 3 ஆண்டுகள் ஆகிவிட்டன. சூடான் தேசிய ராணுவத்துக்கும், அந்நாட்டின் துணை ராணுவப் படையான ரேபிட் சப்போர்ட் ஃபோர்ஸ் (ஆர்எஸ்எஃப் - Rapid Support Forces)-க்கும் இடையேயான ‘அதிகார’ மோதல் மூன்றாண்டுகளில் சுமார் 1.5 லட்சம் உயிர்களைப் பறித்துள்ளது. கிட்டத்தட்ட 1.2 கோடி பேரை அவர்களது வசிப்பிடங்களை விட்டு உள்நாட்டிலேயே முகாம்களில் தஞ்சம் புகச் செய்துள்ளது. எப்போதுமே எரியும் கனலாக இருக்கும் சூடான் கிளர்ச்சிக்கு, அண்மையில் ஆர்எஸ்எஃப் படைகள் தார்ஃபுர் நகரின் முக்கியப் பகுதியான எல் ஃபாசரைக் கைப்பற்றியது மேலும் தூபம் போட்டுள்ளது. அதன் பின்னணி குறித்து சற்று சுருக்கமாகப் பார்ப்போம்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist