``ஹெச்.ராஜா நாகரீகமற்றவர்... சீமான் பேச்சில் நிரந்தர தன்மை இல்லை" - ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஆவேசம்!

“ ‘பெண் அமைச்சருக்கு’ அடக்கமும் பணிவும் வேண்டும் என்ற உங்கள் கருத்து சரியா?”நிர்மலா சீதாராமன் “நான் ஒட்டுமொத்தமாகப் பெண்கள் குறித்த கருத்தாக அதைச் சொல்லவில்லை. அதிகாரத்தில் இருப்பவர்கள் அவர், ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் அடக்கமும் பணிவும் வேண்டும் என்றுதான் குறிப்பிட்டுள்ளேன். எனவே, எனது கருத்து அமைச்சர் நிர்மாலா சீதாராமனுக்கானது.”"உங்களின் கருத்துக்கு 'பெண் தலைவர்களின் மீதான காழ்ப்புணர்ச்சியில் நீங்கள் இருக்கிறீர்கள்' என, ஹெச்.ராஜா பதிலடி கொடுத்திருக்கிறாரே?"ஹெச்.ராஜா"ஹெச்.ராஜா நாகரீகமான ஆள் என்றே நான் கருதுவதில்லை. எனவே அவர் பேசியதற்கெல்லாம் என்னால் கருத்துச் சொல்ல முடியாது!""சர்ச்சை கருத்து விவகாரத்தில் உங்களைப் பகிரங்கமாக மன்னிப்பு கேட்கச் சொல்கிறாரே வானதி சீனிவாசன்?"கோவை ஹோட்டல் உரிமையாளர், நிர்மலா சீதாராமன் சந்திப்பு"அன்னபூரணா உரிமையாளர் சீனிவாசனை மன்னிப்பு கேட்க வைத்து, வீடியோ எடுத்து வெளியில் விட்டது கேவலமான விஷயம் என எனது கருத்தைத்தான் தெரிவித்தேன். நிர்மலா சீதாராமனை அவமதிக்க வேண்டும் என்ற நோக்கில் நான் பேசவில்லை. நடந்ததைத்தானே பேசினேன். அவர்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் விட்டுவிட்டுச் சொல்லவேண்டியது தானே?. நான் மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது."ஆம்ஸ்ட்ராங் கொலை: செல்வப்பெருந்தகைக்கு தொடர்பு? - பகுஜன் சமாஜ் போர்க்கொடியால் நெருக்கடி?"திருமாவளவன் ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு என்று பேசியது தவறில்லை என நீங்கள் சொல்கிறீர்கள். ஆனால் இதே கருத்தை கார்த்தி சிதம்பரம் கூறியபோது எதிர்த்தது ஏன்?"கார்த்தி சிதம்பரம்"அரசியல் கட்சியில் இருக்கும் அனைவருக்கும் ஆட்சி அதிகாரத்தைப் பிடிக்க வேண்டும் என்கிற எண்ணம் இருக்கும். ஆகவே அந்த கோரிக்கையை முன்வைப்பதில் எந்த தவறும் இல்லை. ஆனால் அந்த கனவு எப்போது சாத்தியம் என்பதை நாம் பார்க்க வேண்டும். வரவிருக்கும் தேர்தலில் அதற்கான அவசியம் இருக்காது. தி.மு.க ஆட்சியே தொடரும். முதல்வராக ஸ்டாலினே இருப்பார். மதவாத சக்திகளை, குறிப்பாக மோடியை ஒழிக்க வேண்டும் என்பதில் அனைவரும் ஒன்றாக இருந்து பணியாற்ற வேண்டும். அதற்காக தி.மு.க-வின் கரங்களை வலுப்படுத்த வேண்டும். நாடாளுமன்றத் தேர்தல் முடிந்தவுடன் கார்த்தி சிதம்பரம் கூறிய கருத்து வேறுமாதிரி இருந்தது எனவேதான் எதிர்ப்பு தெரிவித்தேன்.""முதல்வரின் வெளிநாட்டுப் பயணம் குறித்து சர்ச்சை எழுந்திருக்கும் சூழலில் வெள்ளையறிக்கை வெளியிட வேண்டும் என கார்த்தி சிதம்பரம் சொல்கிறாரே?"ஸ்டாலின்"வெள்ளை அறிக்கை, மஞ்சள் அறிக்கை வேண்டும் எனக் கேட்பதெல்லாம் அவரவரின் விருப்பம். என்னைப் பொறுத்தவரையில் பிரமாண்டமான வெற்றியைப் பெற்றிருக்கிறது. ஒரு லட்சம் பேருக்கு மேல் வேலை வாய்ப்பு கிடைத்திருக்கிறது. மேலும் தொழிற்சாலையை மூடிவிட்டு சென்ற போர்டு நிறுவனத்தை மீண்டும் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை எடுத்திருப்பது மிகப்பெரிய விஷயம். 18 நாள்கள் சுற்றுப்பயணம் சென்றாலும் ஒருநாள் கூட ஓய்வு எடுக்காமல் முதலீடுகளைக் கொண்டுவந்திருக்கிறார். அதற்காக அவரை நான் பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறேன்.""ஆனால் காங்கிரஸில் பலருக்குத் துணிச்சல் இல்லை. அதனால்தான் தி.மு.க-வுக்கு எதிராக வாய் திறக்க தயங்குகிறார்கள் என்கிறாரே கார்த்தி சிதம்பரம்?"சத்தியமூர்த்தி பவன்"கார்த்தி சிதம்பரத்துக்குப் பெரிய துணிச்சல் இருக்கிறது. எவ்வளவு பெரிய கஷ்டம் வந்தாலும் நீதிமன்றத்துக்குச் செல்வதற்கு அஞ்சமாட்டார். தன்னுடைய கோபத்தை வெளிப்படையாகப் பேசுவார். எவ்வளவு பெரிய வழக்குகள் வந்தாலும் எதிர்கொள்வார். கடந்த காலங்களில் இதையெல்லாம் பார்த்தோம். வரும் காலத்திலும் பார்க்கலாம். மற்றவர்கள் தைரியத்துடன் இருக்கிறார்களா?, இல்லையா என்பது எனக்குத் தெரியாது!""தமிழக காங்கிரஸ் முன்னாள் திருநாவுக்கரசர் விரைவில் அ.தி.மு.க-வுக்கு செல்லக் கூடும் என்கிற தகவல்கள் வெளியாகியிருக்கிறதே?"திருநாவுக்கரசர்"அவர் காங்கிரசை விட்டுச் செல்வார் என நான் நினைக்கவில்லை. ஏனெனில் ராகுல் காந்தி பாசத்துடன் இருக்கிறார். மாநில தலைவராகவும், பாராளுமன்ற உறுப்பினராகவும் இருந்திருக்கிறார். முக்கிய தலைவர்களுள் ஒருவராக இருக்கிறார். எனவே அவர் காங்கிரஸ் கட்சியில்தான் இருப்பார் என நம்புகிறேன். திருமண விழாவில் பிற கட்சித் தலைவர்கள் கலந்து கொள்வதை வைத்துக்கொண்டு பிற கட்சிக்குச் செல்கிறார் என அரசியல் முடிச்சு போட்டுவிடக் கூடாது. அரசியலைக் கடந்து நல்ல நண்பர்களாக இருக்கும் போது நல்லது, கெட்டதில் கலந்து கொள்வதில் அரசியல் இருக்காது.""சீமான் நீண்ட நாள் அரசியலில் இருக்க முடியாது எனச் சொல்கிறீர்கள். ஆனால் அவருடைய கட்சி தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்படும் நிலையை எட்டியுள்ளதே?"சீமான்"தனிப்பட்ட முறையில் சீமானைப் பிடிக்கும். என்னைவிட வயதில் மிகவும் சிறியவர் என்பதால் அருமை தம்பியாகக் கூட நினைத்துக்கொள்வேன். ஆனால் சீமான் பேச்சில் நிரந்தர தன்மை இல்லை. இன்று பேசுவதை நாளை மாற்றிவிடுவார். நாளை பேசுவதை நாளை மறுநாள் மாற்றிவிடுவார். எனவேதான் சீமான் நீண்ட நாள் அரசியலில் இருக்க முடியாது என்றேன். நிலையான கருத்து இருந்தால் மட்டுமே அரசியலில் நீடித்து நிற்க முடியும்.""பெரியார் திடலுக்கு விசிட் அடித்ததன் மூலமாக விஜய் 'திராவிடக் கொள்கையில்தான் பயணிக்கப் போகிறார் என்கிற விமர்சனத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?"விஜய்"அவர் தனது கொள்கை என்னவென்றே அறிவிக்கவில்லை. புள்ளிவைத்துவிட்டுதான் கோலம் போட வேண்டும். ஆனால் விஜய் கோலம் போட்டுவிட்டு புள்ளியைத் தேடிக்கொண்டு இருக்கிறார். எம்ஜிஆர் கட்சி ஆரம்பிக்கும் போது கூட அண்ணாவின் கொள்கைகளைப் பின்பற்றுவதாகச் சொல்லித்தான் ஆரம்பித்தார். இவர் அதுகூட சொல்லவில்லை. அறிவித்த கொடிக்கு என்ன அர்த்தம் என்றும் கூட தெரிவிக்கவில்லை. அவருக்கே பல விஷயங்கள் புரியவில்லை என்று நினைக்கின்றேன். கொஞ்சம் தெளிவாகச் சிந்தித்து ஒரு முடிவுக்கு வந்து பேச வேண்டும். கொள்கைகளை அறிவிக்காமல் கட்சி நடத்துவதை முதன் முறையாக தற்போதுதான் பார்க்கிறேன். அரசியல் கட்சிகள் தெருமுனை கூட்டம் நடத்தினால் கூட

Sep 23, 2024 - 16:42
 0  6
``ஹெச்.ராஜா நாகரீகமற்றவர்... சீமான் பேச்சில் நிரந்தர தன்மை இல்லை" - ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஆவேசம்!

“ ‘பெண் அமைச்சருக்கு’ அடக்கமும் பணிவும் வேண்டும் என்ற உங்கள் கருத்து சரியா?”

நிர்மலா சீதாராமன்

“நான் ஒட்டுமொத்தமாகப் பெண்கள் குறித்த கருத்தாக அதைச் சொல்லவில்லை. அதிகாரத்தில் இருப்பவர்கள் அவர், ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் அடக்கமும் பணிவும் வேண்டும் என்றுதான் குறிப்பிட்டுள்ளேன். எனவே, எனது கருத்து அமைச்சர் நிர்மாலா சீதாராமனுக்கானது.”

"உங்களின் கருத்துக்கு 'பெண் தலைவர்களின் மீதான காழ்ப்புணர்ச்சியில் நீங்கள் இருக்கிறீர்கள்' என, ஹெச்.ராஜா பதிலடி கொடுத்திருக்கிறாரே?"

ஹெச்.ராஜா

"ஹெச்.ராஜா நாகரீகமான ஆள் என்றே நான் கருதுவதில்லை. எனவே அவர் பேசியதற்கெல்லாம் என்னால் கருத்துச் சொல்ல முடியாது!"

"சர்ச்சை கருத்து விவகாரத்தில் உங்களைப் பகிரங்கமாக மன்னிப்பு கேட்கச் சொல்கிறாரே வானதி சீனிவாசன்?"

கோவை ஹோட்டல் உரிமையாளர், நிர்மலா சீதாராமன் சந்திப்பு

"அன்னபூரணா உரிமையாளர் சீனிவாசனை மன்னிப்பு கேட்க வைத்து, வீடியோ எடுத்து வெளியில் விட்டது கேவலமான விஷயம் என எனது கருத்தைத்தான் தெரிவித்தேன். நிர்மலா சீதாராமனை அவமதிக்க வேண்டும் என்ற நோக்கில் நான் பேசவில்லை. நடந்ததைத்தானே பேசினேன். அவர்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் விட்டுவிட்டுச் சொல்லவேண்டியது தானே?. நான் மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது."

"திருமாவளவன் ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு என்று பேசியது தவறில்லை என நீங்கள் சொல்கிறீர்கள். ஆனால் இதே கருத்தை கார்த்தி சிதம்பரம் கூறியபோது எதிர்த்தது ஏன்?"

கார்த்தி சிதம்பரம்

"அரசியல் கட்சியில் இருக்கும் அனைவருக்கும் ஆட்சி அதிகாரத்தைப் பிடிக்க வேண்டும் என்கிற எண்ணம் இருக்கும். ஆகவே அந்த கோரிக்கையை முன்வைப்பதில் எந்த தவறும் இல்லை. ஆனால் அந்த கனவு எப்போது சாத்தியம் என்பதை நாம் பார்க்க வேண்டும். வரவிருக்கும் தேர்தலில் அதற்கான அவசியம் இருக்காது. தி.மு.க ஆட்சியே தொடரும். முதல்வராக ஸ்டாலினே இருப்பார். மதவாத சக்திகளை, குறிப்பாக மோடியை ஒழிக்க வேண்டும் என்பதில் அனைவரும் ஒன்றாக இருந்து பணியாற்ற வேண்டும். அதற்காக தி.மு.க-வின் கரங்களை வலுப்படுத்த வேண்டும். நாடாளுமன்றத் தேர்தல் முடிந்தவுடன் கார்த்தி சிதம்பரம் கூறிய கருத்து வேறுமாதிரி இருந்தது எனவேதான் எதிர்ப்பு தெரிவித்தேன்."

"முதல்வரின் வெளிநாட்டுப் பயணம் குறித்து சர்ச்சை எழுந்திருக்கும் சூழலில் வெள்ளையறிக்கை வெளியிட வேண்டும் என கார்த்தி சிதம்பரம் சொல்கிறாரே?"

ஸ்டாலின்

"வெள்ளை அறிக்கை, மஞ்சள் அறிக்கை வேண்டும் எனக் கேட்பதெல்லாம் அவரவரின் விருப்பம். என்னைப் பொறுத்தவரையில் பிரமாண்டமான வெற்றியைப் பெற்றிருக்கிறது. ஒரு லட்சம் பேருக்கு மேல் வேலை வாய்ப்பு கிடைத்திருக்கிறது. மேலும் தொழிற்சாலையை மூடிவிட்டு சென்ற போர்டு நிறுவனத்தை மீண்டும் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை எடுத்திருப்பது மிகப்பெரிய விஷயம். 18 நாள்கள் சுற்றுப்பயணம் சென்றாலும் ஒருநாள் கூட ஓய்வு எடுக்காமல் முதலீடுகளைக் கொண்டுவந்திருக்கிறார். அதற்காக அவரை நான் பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறேன்."

"ஆனால் காங்கிரஸில் பலருக்குத் துணிச்சல் இல்லை. அதனால்தான் தி.மு.க-வுக்கு எதிராக வாய் திறக்க தயங்குகிறார்கள் என்கிறாரே கார்த்தி சிதம்பரம்?"

சத்தியமூர்த்தி பவன்

"கார்த்தி சிதம்பரத்துக்குப் பெரிய துணிச்சல் இருக்கிறது. எவ்வளவு பெரிய கஷ்டம் வந்தாலும் நீதிமன்றத்துக்குச் செல்வதற்கு அஞ்சமாட்டார். தன்னுடைய கோபத்தை வெளிப்படையாகப் பேசுவார். எவ்வளவு பெரிய வழக்குகள் வந்தாலும் எதிர்கொள்வார். கடந்த காலங்களில் இதையெல்லாம் பார்த்தோம். வரும் காலத்திலும் பார்க்கலாம். மற்றவர்கள் தைரியத்துடன் இருக்கிறார்களா?, இல்லையா என்பது எனக்குத் தெரியாது!"

"தமிழக காங்கிரஸ் முன்னாள் திருநாவுக்கரசர் விரைவில் அ.தி.மு.க-வுக்கு செல்லக் கூடும் என்கிற தகவல்கள் வெளியாகியிருக்கிறதே?"

திருநாவுக்கரசர்

"அவர் காங்கிரசை விட்டுச் செல்வார் என நான் நினைக்கவில்லை. ஏனெனில் ராகுல் காந்தி பாசத்துடன் இருக்கிறார். மாநில தலைவராகவும், பாராளுமன்ற உறுப்பினராகவும் இருந்திருக்கிறார். முக்கிய தலைவர்களுள் ஒருவராக இருக்கிறார். எனவே அவர் காங்கிரஸ் கட்சியில்தான் இருப்பார் என நம்புகிறேன். திருமண விழாவில் பிற கட்சித் தலைவர்கள் கலந்து கொள்வதை வைத்துக்கொண்டு பிற கட்சிக்குச் செல்கிறார் என அரசியல் முடிச்சு போட்டுவிடக் கூடாது. அரசியலைக் கடந்து நல்ல நண்பர்களாக இருக்கும் போது நல்லது, கெட்டதில் கலந்து கொள்வதில் அரசியல் இருக்காது."

"சீமான் நீண்ட நாள் அரசியலில் இருக்க முடியாது எனச் சொல்கிறீர்கள். ஆனால் அவருடைய கட்சி தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்படும் நிலையை எட்டியுள்ளதே?"

சீமான்

"தனிப்பட்ட முறையில் சீமானைப் பிடிக்கும். என்னைவிட வயதில் மிகவும் சிறியவர் என்பதால் அருமை தம்பியாகக் கூட நினைத்துக்கொள்வேன். ஆனால் சீமான் பேச்சில் நிரந்தர தன்மை இல்லை. இன்று பேசுவதை நாளை மாற்றிவிடுவார். நாளை பேசுவதை நாளை மறுநாள் மாற்றிவிடுவார். எனவேதான் சீமான் நீண்ட நாள் அரசியலில் இருக்க முடியாது என்றேன். நிலையான கருத்து இருந்தால் மட்டுமே அரசியலில் நீடித்து நிற்க முடியும்."

"பெரியார் திடலுக்கு விசிட் அடித்ததன் மூலமாக விஜய் 'திராவிடக் கொள்கையில்தான் பயணிக்கப் போகிறார் என்கிற விமர்சனத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?"

விஜய்

"அவர் தனது கொள்கை என்னவென்றே அறிவிக்கவில்லை. புள்ளிவைத்துவிட்டுதான் கோலம் போட வேண்டும். ஆனால் விஜய் கோலம் போட்டுவிட்டு புள்ளியைத் தேடிக்கொண்டு இருக்கிறார். எம்ஜிஆர் கட்சி ஆரம்பிக்கும் போது கூட அண்ணாவின் கொள்கைகளைப் பின்பற்றுவதாகச் சொல்லித்தான் ஆரம்பித்தார். இவர் அதுகூட சொல்லவில்லை. அறிவித்த கொடிக்கு என்ன அர்த்தம் என்றும் கூட தெரிவிக்கவில்லை. அவருக்கே பல விஷயங்கள் புரியவில்லை என்று நினைக்கின்றேன். கொஞ்சம் தெளிவாகச் சிந்தித்து ஒரு முடிவுக்கு வந்து பேச வேண்டும். கொள்கைகளை அறிவிக்காமல் கட்சி நடத்துவதை முதன் முறையாக தற்போதுதான் பார்க்கிறேன். அரசியல் கட்சிகள் தெருமுனை கூட்டம் நடத்தினால் கூட அதற்கென விதிமுறைகள் இருக்கின்றன. அதன்படி விஜய் கட்சியின் பொதுக்கூட்டத்திற்கும் சட்டப்படிதான் விதிமுறைகளை வகுத்துள்ளனர்."

"வி.சி.க-வின் மது ஒழிப்பு மாநாட்டின் நிலைப்பாடு குறித்து காங்கிரஸ் பேசுவதற்குத் தயங்குவது ஏன்?"

திருமா!

"அதுகுறித்தெல்லாம் கட்சித் தலைமைதான் முடிவு செய்யும் மது ஒழிப்பை நான் வரவேற்கின்றேன். மதுவால் பலரின் வாழ்க்கை சீரழிகிறது. எனவே மது ஒழிப்பு அவசியம்தான். அதேநேரத்தில் கள்ளு கடைகளைத் திறக்க வேண்டும். அதன் மூலம் விவசாயிகள் பயன் பெறுவார்கள். பெரிய பாதிப்பு இருக்காது."

"பிரதமராக மோடி மூன்றாவது முறையாகப் பதவியேற்று 100 நாள்கள் ஆனதை பா.ஜ.க-வினர் விமர்சையாக கொண்டாடி வருகிறார்கள். உலகின் உற்பத்தி மையமாக இந்தியா மாறியுள்ளது என்கிறாரே அமித்ஷா?"

பிரதமர் நரேந்திர மோடி

"மோடியின் 100 நாள் ஆட்சியில் பா.ஜ.க அரசு தோற்றுவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். வேலைவாய்ப்பு இல்லாமல் லட்சக்கணக்கான இளைஞர்கள் தவித்துக்கொண்டு இருக்கிறார்கள். முதல்முறை அவர் பிரதமராக வரும்போது கூறிய வாக்குறுதிகளே இன்னும் நிறைவேற்றப்படவில்லை. எனவே 100-வது நாளுடன் அவர்களின் கதை முடித்துவிடும் என நினைக்கிறேன். இன்னும் ஒருமாதத்திற்குள் மோடி பதவி விலக வேண்டிய சூழல் வரும். ஆர்எஸ்எஸ் அவரை மாற்றுவதற்கு முடிவு செய்துவிட்டது."

"உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராகிறார் என்பதை எப்படிப் பார்க்கிறீர்கள்?"

உதயநிதி - Udhayanidhi

"உதயநிதிக்கு எந்த பதவி கொடுத்தாலும் சிறப்பாகச் செயல்படக்கூடியவர். இன்று விளையாட்டுத்துறை அமைச்சராகச் சிறப்பாகச் செயல்பட்டுப் பல சாதனைகளைச் செய்து கொண்டிருக்கிறார். ஆகவே அவர் எந்த பொறுப்பை எடுத்துக்கொண்டாலும் சிறப்பாகச் செயல்பட முடியும்."

"முன்னாள் தலைவர்களைப் போலவே செல்வப்பெருந்தகையும் கோஷ்டி அரசியல் செய்கிறார் என்கிற விமர்சனத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?"

செல்வப்பெருந்தகை

"இப்போதுதான் பதவிக்கு வந்திருக்கிறார். போகப் போகத்தான் அவருடைய செயல்பாடு என்னவென்று தெரியும். காங்கிரசில் கோஷ்டி இருக்கிறது எனச் சொல்வது வழக்கமான ஒன்றாக இருக்கிறது. கோஷ்டி இருப்பதெல்லாம் நான்கு பேர் இருக்கும் பா.ஜ.க-வில்தான் அதிகமாக இருக்கின்றது. இருப்பது நான்கு பேர். அவர்கள் ஒவ்வொருவரும் ஒரு திசையில் பயணிக்கிறார்கள். கோஷ்டிகள் அதிகமாக இருக்கிறது என்கிற பெயரைக் காங்கிரஸிடமிருந்து பா.ஜ.க தட்டிப் பறித்துக்கொண்டது."

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist