ஸ்பெயின் நாட்டு பண்ணையில் பணிபுரியும் மோகன்லால் மகன் பிரணவ்!

நடிகர் மோகன்லாலின் மகனும், நடிகருமான பிரணவ் மோகன்லால், ஸ்பெயின் நாட்டில் உள்ள பண்ணையில் சம்பளம் ஏதுமின்றி பணி செய்து வருகிறார் என அவரது அம்மா சுசித்ரா மோகன்லால் தெரிவித்துள்ளார். யூடியூப் நிகழ்ச்சி ஒன்றில் இதனை அவர் பகிர்ந்திருந்தார். 

Nov 12, 2024 - 12:38
 0  3
ஸ்பெயின் நாட்டு பண்ணையில் பணிபுரியும் மோகன்லால் மகன் பிரணவ்!

திருவனந்தபுரம்: நடிகர் மோகன்லாலின் மகனும், நடிகருமான பிரணவ் மோகன்லால், ஸ்பெயின் நாட்டில் உள்ள பண்ணையில் சம்பளம் ஏதுமின்றி பணி செய்து வருகிறார் என அவரது அம்மா சுசித்ரா மோகன்லால் தெரிவித்துள்ளார். யூடியூப் நிகழ்ச்சி ஒன்றில் இதனை அவர் பகிர்ந்திருந்தார்.

“பிரணவ் (அப்பு), இப்போது ஸ்பெயின் நாட்டில் உள்ள பண்ணை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இதற்காக அவர் சம்பளம் ஏதும் பெறவில்லை. அதற்கு பதிலாக அங்கு தங்குவதற்கு இடமும், உணவும் பெறுகிறார். சமயங்களில் குதிரை, ஆடு போன்றவற்றையும் கவனித்துக் கொள்கிறார். அது அவருக்கு ஒரு அனுபவமாக அமைந்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist