நடிகர் டெல்லி கணேஷ் உடல் தகனம்

பிரபல நடிகர் டெல்லி கணேஷ் (80), வயது முதிர்வு காரணமாக சனிக்கிழமை இரவு காலமானார். அவர் உடலுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலகினர், பொதுமக்கள் என பலரும் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

Nov 12, 2024 - 12:38
 0  11
நடிகர் டெல்லி கணேஷ் உடல் தகனம்

சென்னை: பிரபல நடிகர் டெல்லி கணேஷ் (80), வயது முதிர்வு காரணமாக சனிக்கிழமை இரவு காலமானார். அவர் உடலுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலகினர், பொதுமக்கள் என பலரும் நேரில் அஞ்சலி செலுத்தினர். பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், நடிகர்கள் ரஜினி, கமல் உட்பட பலர் இரங்கல் தெரிவித்து இருந்தனர்.

அவரது இறுதிச் சடங்கு திங்கள்கிழமை நடந்தது. அவரது மகன் மகா மற்றும் குடும்பத்தினர் இறுதிச் சடங்குகளைச் செய்தனர். டெல்லி கணேஷ், இந்திய விமானப் படையில் பணியாற்றியவர் என்பதால் அவரது வீட்டுக்குச் சென்ற விமானப் படை வீரர்கள், உடல் மீது தேசியக் கொடியை போர்த்தியும், மலர் வளையம் வைத்தும் மரியாதை செலுத்தினர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist