ஷுப்மன் கில், கோலி, ஸ்ரேயஸ் ஐயர் அசத்தல்: ஒருநாள் போட்டி தொடரை முழுமையாக வென்றது இந்தியா
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜாஸ் பட்லர் பீல்டிங்கை தேர்வு செய்தார்.

அகமதாபாத்: இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி மற்றும் 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 142 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரை 3-0 என முழுமையாக தொடரை வென்றது.
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜாஸ் பட்லர் பீல்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணியில் 3 மாற்றங்கள் இருந்தது. முகமது ஷமி, குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் நீக்கப்பட்டு அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்பட்டனர். இங்கிலாந்து அணியில் ஜேமி ஓவர்டன்னுக்கு பதிலாக டாம் பேன்டன் இடம் பெற்றார்.
What's Your Reaction?






