வெளிமாநில பதிவெண்கள் கொண்ட ஆம்னி பேருந்துகளை தமிழகத்தில் இயக்க தடை அமல்
தமிழகத்தில் வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளை இயக்குவதற்கான தடை அமலுக்குவந்துள்ளது
சென்னை: தமிழகத்தில் வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளை இயக்குவதற்கான தடை அமலுக்குவந்துள்ளது. இதை மீறி இயக்கப்படும் ஆம்னி பேருந்துகளை சிறைபிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அகில இந்திய சுற்றுலா அனுமதிச்சீட்டு (ஏஐடிபி) பெற்ற வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகள், தமிழகத்தில் பயணியர் பேருந்துபோல செயல்படுவதால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. எனவே,வெளிமாநில பதிவெண் கொண்டஆம்னி பேருந்துகளை, தமிழக பதிவெண்ணில் மாற்ற போக்குவரத்து துறை உத்தரவிட்டது. இதற்கானஅவகாசம், நேற்று (ஜூன் 18) காலையுடன் முடிவடைந்தது. இதையடுத்து, அத்தகைய பேருந்துகளை சிறைபிடிக்க போக்குவரத்து ஆணையர்அ.சண்முகசுந்தரம் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
What's Your Reaction?