மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்காக தமிழக சட்டப்பேரவை நாளை கூடுகிறது
தமிழகத்தில் துறை வாரியாக மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்காக, சட்டப்பேரவை நாளை கூடுகிறது
சென்னை: தமிழகத்தில் துறை வாரியாக மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்காக, சட்டப்பேரவை நாளை கூடுகிறது.
சட்டப்பேரவையில் வழக்கமாக, பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகு, துறை வாரியாக மானிய கோரிக்கை மீது விவாதம் நடத்தப்பட்டு, சம்பந்தப்பட்ட துறைகளின் திட்டங்களுக்கு, பேரவை ஒப்புதலுடன் நிதி விடுவிக்கப்படும். சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம், மழை உள்ளிட்டபல்வேறு காரணங்களால் தள்ளிவைக்கப்பட்டு, பிப்ரவரி 12-ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது.
What's Your Reaction?