'விஜய்யை பாஜக இழுக்க பார்க்கிறதா?' - 'Y' பிரிவு பாதுகாப்புப் பற்றி கே.பி.முனுசாமி விமர்சனம்

அதிமுகவின் முன்னாள் அமைச்சர் மற்றும் கட்சியின் துணைப் பொதுச்செயலாளரான கே.பி.முனுசாமி கிருஷ்ணகிரியில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது விஜய்க்கு வழங்கப்பட்டிருக்கும் 'Y' பிரிவு பாதுகாப்பை பற்றி விமர்சனத்தையும் பேசுபொருளாகியிருக்கும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பற்றிய கருத்தையும் முன்வைத்தார்.Vijayவிஜய் பற்றி பேசுகையில், 'விஜய்க்கு எந்த அடிப்படையில் மத்திய அரசு Y பிரிவு பாதுகாப்பு கொடுத்திருக்கிறது என தெரியவில்லை. விஜய் நடிகராக இருக்கிறார். ஒரு கட்சியின் தலைவராக இருக்கிறார். அவர் வருகின்ற இடத்திலெல்லாம் கூட்டம் கூடுகிறது. அதனால் பாதுகாப்புக்காக பெருந்தன்மையாக கொடுத்திருந்தால் மகிழ்ச்சி. அரசியல்ரீதியாக சுயநலமாக விஜய்யை தங்கள் பக்கம் இழுப்பதற்காக இந்த 'Y' பிரிவு பாதுகாப்பை கொடுத்திருக்கிறார்கள் என்றால், பா.ஜ.கவின் வரலாற்றை புரட்டிப் பாருங்கள் எது உண்மை என்பது உங்களுக்கே தெரியும்.' என்றார்.செங்கோட்டையனை பற்றி பேசுகையில், 'செங்கோட்டையன் அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவர். ஜெயலலிதா அவருக்கு எந்தளவுக்கு மதிப்பும் மரியாதையும் அளித்தாரோ அதே அளவுக்கு எடப்பாடி பழனிசாமியும் அவரை மதிப்புடன் நடத்துகிறார்.செங்கோட்டையன்ஈரோடு முத்துசாமி போல இல்லாமல், அவர் கடைசி வரை அதிமுகவுக்கு உறுதுணையாக இருப்பார் என நம்புகிறேன்.' என்றார். Vikatan Play இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்' பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்! https://tinyurl.com/Velpari-Vikatan-Play

Feb 14, 2025 - 18:39
 0  3
'விஜய்யை பாஜக இழுக்க பார்க்கிறதா?' - 'Y' பிரிவு பாதுகாப்புப் பற்றி கே.பி.முனுசாமி விமர்சனம்
அதிமுகவின் முன்னாள் அமைச்சர் மற்றும் கட்சியின் துணைப் பொதுச்செயலாளரான கே.பி.முனுசாமி கிருஷ்ணகிரியில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது விஜய்க்கு வழங்கப்பட்டிருக்கும் 'Y' பிரிவு பாதுகாப்பை பற்றி விமர்சனத்தையும் பேசுபொருளாகியிருக்கும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பற்றிய கருத்தையும் முன்வைத்தார்.
Vijay

விஜய் பற்றி பேசுகையில், 'விஜய்க்கு எந்த அடிப்படையில் மத்திய அரசு Y பிரிவு பாதுகாப்பு கொடுத்திருக்கிறது என தெரியவில்லை. விஜய் நடிகராக இருக்கிறார். ஒரு கட்சியின் தலைவராக இருக்கிறார். அவர் வருகின்ற இடத்திலெல்லாம் கூட்டம் கூடுகிறது. அதனால் பாதுகாப்புக்காக பெருந்தன்மையாக கொடுத்திருந்தால் மகிழ்ச்சி. அரசியல்ரீதியாக சுயநலமாக விஜய்யை தங்கள் பக்கம் இழுப்பதற்காக இந்த 'Y' பிரிவு பாதுகாப்பை கொடுத்திருக்கிறார்கள் என்றால், பா.ஜ.கவின் வரலாற்றை புரட்டிப் பாருங்கள் எது உண்மை என்பது உங்களுக்கே தெரியும்.' என்றார்.

செங்கோட்டையனை பற்றி பேசுகையில், 'செங்கோட்டையன் அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவர். ஜெயலலிதா அவருக்கு எந்தளவுக்கு மதிப்பும் மரியாதையும் அளித்தாரோ அதே அளவுக்கு எடப்பாடி பழனிசாமியும் அவரை மதிப்புடன் நடத்துகிறார்.

செங்கோட்டையன்

ஈரோடு முத்துசாமி போல இல்லாமல், அவர் கடைசி வரை அதிமுகவுக்கு உறுதுணையாக இருப்பார் என நம்புகிறேன்.' என்றார்.

Vikatan Play

இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்' பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்! 

https://tinyurl.com/Velpari-Vikatan-Play

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist