Valentine's Day: ``ஒவ்வொரு நாளும் காதலர் தினம்தான்..'' -உதயநிதியின் காதலர் தின வாழ்த்து!
அறநிலையத்துறையின் சார்பில் 30 இணையர்களுக்கு திருமணம் செய்து வைக்கும் நிகழ்வு நடந்திருந்தது. அதில் கலந்துகொண்ட துணை முதலமைச்சர் உதயநிதி, 'ஒவ்வொரு நாளுமே காதலர் தினம்தான்..' என காதலர் தின வாழ்த்துகளை தெரிவித்திருக்கிறார்.Udhaynidhi Stalinநிகழ்வில் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி, "30 இணையர்களுக்கு சிறப்பாக திருமணத்தை நடத்தி வைத்திருக்கிறோம். இன்றைக்கு காதலர் தினம் வேறு. இதைச் சொன்னால் சிலருக்கு கோபம் வரும். காதலர் தினத்தை கொண்டாடக் கூடாதென சொல்வார்கள். அப்படியெல்லாம் இருக்க முடியுமா? ஒவ்வொரு நாளுமே காதலர் தினம்தான். இந்த 30 தம்பதிகளும் நல்ல காதலர்களாக நல்ல நண்பர்களாக வாழ்நாள் முழுக்க மகிழ்ச்சியோடு இருக்க வாழ்த்துகிறேன்." என்றார்.நிகழ்வை முடித்துவிட்டு பத்திரிகையாளர்களை சந்தித்த உதயநிதி, "சமீபத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் தலைவர் தலைமையிலான திமுக கூட்டணிக்கு மக்கள் நல்ல சர்டிபிகேட்டை கொடுத்திருந்தனர்.அது உற்சாகத்தை கொடுத்திருக்கிறது. இன்னும் வேகத்தை கூட்டியிருக்கிறது. மக்களுக்காக இன்னும் பணி செய்ய வேண்டும் என்கிற உத்வேகத்தை கொடுத்திருக்கிறது." என்றார்.Helmet Hygiene: ஹெல்மெட்டை தலைமுடிக்கு ஃப்ரெண்டாக்க 5 டிப்ஸ்!

அறநிலையத்துறையின் சார்பில் 30 இணையர்களுக்கு திருமணம் செய்து வைக்கும் நிகழ்வு நடந்திருந்தது. அதில் கலந்துகொண்ட துணை முதலமைச்சர் உதயநிதி, 'ஒவ்வொரு நாளுமே காதலர் தினம்தான்..' என காதலர் தின வாழ்த்துகளை தெரிவித்திருக்கிறார்.

நிகழ்வில் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி, "30 இணையர்களுக்கு சிறப்பாக திருமணத்தை நடத்தி வைத்திருக்கிறோம். இன்றைக்கு காதலர் தினம் வேறு. இதைச் சொன்னால் சிலருக்கு கோபம் வரும். காதலர் தினத்தை கொண்டாடக் கூடாதென சொல்வார்கள். அப்படியெல்லாம் இருக்க முடியுமா? ஒவ்வொரு நாளுமே காதலர் தினம்தான். இந்த 30 தம்பதிகளும் நல்ல காதலர்களாக நல்ல நண்பர்களாக வாழ்நாள் முழுக்க மகிழ்ச்சியோடு இருக்க வாழ்த்துகிறேன்." என்றார்.
நிகழ்வை முடித்துவிட்டு பத்திரிகையாளர்களை சந்தித்த உதயநிதி, "சமீபத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் தலைவர் தலைமையிலான திமுக கூட்டணிக்கு மக்கள் நல்ல சர்டிபிகேட்டை கொடுத்திருந்தனர்.
அது உற்சாகத்தை கொடுத்திருக்கிறது. இன்னும் வேகத்தை கூட்டியிருக்கிறது. மக்களுக்காக இன்னும் பணி செய்ய வேண்டும் என்கிற உத்வேகத்தை கொடுத்திருக்கிறது." என்றார்.
What's Your Reaction?






