லெபனான் மீது இஸ்ரேல் குண்டு மழை: 200 ராக்கெட்களை ஏவி ஹிஸ்புல்லா பதிலடி
கடந்த 2006-ம் ஆண்டுக்குப் பிறகுமிகப்பெரிய தாக்குதல் நடவடிக்கையாக இஸ்ரேல் ராணுவம் நேற்று முன்தினம் லெபனானின் தெற்கு பகுதி நகரங்கள் மீது குண்டு மழை பொழிந்தது
ஜெருசலேம்: கடந்த 2006-ம் ஆண்டுக்குப் பிறகுமிகப்பெரிய தாக்குதல் நடவடிக்கையாக இஸ்ரேல் ராணுவம் நேற்று முன்தினம் லெபனானின் தெற்கு பகுதி நகரங்கள் மீது குண்டு மழை பொழிந்தது.
குறிப்பாக, லெபனானின் ஹெர்மல், பிப்லோஸ், பால்பெக் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஹிஸ்புல்லா அமைப்பினர் ஆயுதங்களை பதுக்கி வைத்துள்ளதை இஸ்ரேல் உளவுத் துறை கண்டறிந்ததையடுத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில்சில குண்டுகள் பொதுமக்கள் குடியிருக்கும் பகுதிகளில் விழுந்ததால் 558 பேர் உயிரிழந்துவிட்டதாகவும், 3,000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் லெபனான் சுகாதார அமைச்சகம் தெரிவித் துள்ளது.
What's Your Reaction?