லெபனானில் வாக்கி-டாக்கிகள் வெடித்து 30-க்கும் மேற்பட்டோர் பலி, 3,250 பேர் காயம்
லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நேற்று (செப்.18) ஒரே நேரத்தில் பல இடங்களிலும் வாக்கி-டாக்கிகள், சில சூரிய மின் சக்தியால் இயங்கும் உபகரணங்கள் வெடித்ததில் 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 3000-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
பெய்ரூட்: லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நேற்று (செப்.18) ஒரே நேரத்தில் பல இடங்களிலும் வாக்கி-டாக்கிகள், சில சூரிய மின் சக்தியால் இயங்கும் உபகரணங்கள் வெடித்ததில் 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 3000-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
லெபனானில் நேற்று முன்தினம் பேஜர்கள் வெடித்தச் சம்பவத்தை தொடர்ந்து நேற்று அதே பாணியில் வாக்கி-டாக்கிகள் உள்ளிட்ட எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் வெடித்துச் சிதறியது அந்நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த வாக்கி-டாக்கிகள் அனைத்துமே ஈரான் ஆதரவு கொண்ட ஹிஸ்புல்லா அமைப்பினர் பயன்படுத்தியது எனக் கூறப்படுகிறது. ஒரே நேரத்தில் பல இடங்களில் வாக்கி-டாக்கிகள் வெடித்த நிலையில் அவற்றில் ஒன்று முந்தைய நாள் பேஜர் தாக்குதலில் உயிரிழந்த ஹிஸ்புல்லா இயக்கத்தைச் சேர்ந்தவரின் இறுதிச் சடங்கு நிகழ்வின் போது வெடித்தது கவனிக்கத்தக்கது.
What's Your Reaction?