குவைத் தீ விபத்து தொடர்பாக 3 இந்தியர்கள் உட்பட 9 பேர் கைது
குவைத் நாட்டின் மங்கஃப் நகரத்தில் அமைந்துள்ள 6 மாடி கொண்ட குடியிருப்பில் 200 பேர் தங்கி இருந்தனர்
மங்கஃப்: குவைத் நாட்டின் மங்கஃப் நகரத்தில் அமைந்துள்ள 6 மாடி கொண்ட குடியிருப்பில் 200 பேர் தங்கி இருந்தனர். இதில் கேரளா, தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் அதிக எண்ணிக்கையில் தங்கி இருந்தனர்.
இந்த அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த ஜூன் 12-ம்தேதி அதிகாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 46 இந்தியர்கள் உட்பட 50 பேர் உயிரிழந்தனர். இதில் 7 பேர் தமிழ்நாட்டையும் 23 பேர் கேரளாவையும் சேர்ந்தவர்கள் ஆவர். அடுக்குமாடி குடியிருப்பின் தரைத்தளத்தில் இருந்த காவலர் அறையில் மின் கசிவு ஏற்பட்டு தீ பற்றியதாக முதற்கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.
What's Your Reaction?