லெபனானில் முடிவுக்கு வந்த மோதல்: இஸ்ரேல் - ஹிஸ்புல்லா இடையே போர் நிறுத்த ஒப்பந்தம்
இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்புக்கு இடையிலான போர்நிறுத்த ஒப்பந்தம் இந்திய நேரப்படி இன்று காலை 7.30 மணி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
பெய்ரூட்: இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்புக்கு இடையிலான போர்நிறுத்த ஒப்பந்தம் இந்திய நேரப்படி இன்று காலை 7.30 மணி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இதனால் மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான லெபனானில் ஓராண்டுக்கும் மேலாக இருதரப்புக்கும் இடையே நீடித்து வந்த மோதல் முடிவுக்கு வந்துள்ளது.
இதன் பலனாக லெபனான் நாட்டில் முகாமிட்டுள்ள இஸ்ரேல் படைகள், படிப்படியாக வெளியேறும் என்றும், மீண்டும் ஹிஸ்புல்லா அமைப்பின் மறுகட்டமைப்பை தடுக்கும் வகையில் அந்த நாட்டின் தெற்கு பகுதி பாதுகாப்பினை ராணுவம் உறுதி செய்யும் என்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
What's Your Reaction?