லெபனானில் பேஜர் குண்டுகள் வெடித்தது எப்படி? - அலசல்களும் அடங்காத அதிர்ச்சியும்
தொழில்நுட்ப கோளாறு போன்ற காரணத்தால் எங்கோ ஒரிடத்தில் செல்போன் போன்ற மின்னணு சாதனங்கள் வெடித்துச் சிதறுவது பற்றி கேள்விபட்டிருக்கிறோம்
சென்னை: தொழில்நுட்ப கோளாறு போன்ற காரணத்தால் எங்கோ ஒரிடத்தில் செல்போன் போன்ற மின்னணு சாதனங்கள் வெடித்துச் சிதறுவது பற்றி கேள்விபட்டிருக்கிறோம். ஆனால் லெபனான் நாட்டில் ஒரே நேரத்தில் 5,000-க்கும் மேற்பட்ட பேஜர் சாதனங்கள் வெடித்துச் சிதறிய நிகழ்வு மத்தியகிழக்கை மட்டும் அல்ல, மொத்த உலகையும் உலுக்கி எடுத்திருக்கிறது.
இஸ்ரேல்- காசா மோதல் விளைவாக ஹிஸ்புல்லா இயக்கம், இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதலில் ஈடுபட்டிருக்கிறது. இருநாடுகளின் எல்லைப் பகுதியில் அண்மைக்காலமாக மோதல் வலுத்திருக்கிறது. இந்த பின்னணியில் லெபனான்பகுதியில் பேஜர் குண்டுகள் வெடித்துள்ளன. இந்த தாக்குதலை நிகழ்த்தியது யார், பேஜர்கள் வெடித்தது எப்படி என்பது உறுதியாக தெரியவில்லை. இஸ்ரேல் திட்டமிட்டு தாக்குதலை நடத்தியிருக்கிறது என ஹிஸ்புல்லா இயக்கம் குற்றம்சாட்டியுள்ளது. இதற்கு இஸ்ரேல் நேரடியாக கருத்து தெரிவிக்கவில்லை.
What's Your Reaction?