அமெரிக்க அதிபர் தேர்தல் | கமலா ஹாரிஸுடன் நேரடி விவாதம் - டொனால்ட் ட்ரம்ப் சம்மதம்

ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸுடன் நேரடி விவாத நிகழ்வில் பங்கேற்க குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் சம்மதம் தெரிவித்துள்ளார்.

Aug 30, 2024 - 10:16
 0  1
அமெரிக்க அதிபர் தேர்தல் | கமலா ஹாரிஸுடன் நேரடி விவாதம் - டொனால்ட் ட்ரம்ப் சம்மதம்

நியூயார்க்: ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸுடன் நேரடி விவாத நிகழ்வில் பங்கேற்க குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் சம்மதம் தெரிவித்துள்ளார். முன்னதாக, விவாத விதிகளை சுட்டிக்காட்டி அதில் பங்கேற்பதை தவிர்க்கக் கூடும் என ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.

இந்த விவாத நிகழ்வை ஏபிசி நியூஸ் நேரலையில் ஒளிபரப்பு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் ட்ரம்ப் ஆகியோர் நேரடி விவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது பைடன் ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக இருந்தார். அதன் பின்னர் அதிபர் தேர்தல் போட்டியிலிருந்து அவர் விலகியது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist