இலங்கை அதிபராக பதவியேற்றார் அநுரா குமார திசாநாயக்க - பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து
இலங்கையின் 9-வது அதிபராக தேசிய மக்கள் சக்தி (என்பிபி) சார்பில் போட்டியிட்ட அநுரா குமார திசாநாயக்க (56) பதவியேற்றார்.
கொழும்பு: இலங்கையின் 9-வது அதிபராக தேசிய மக்கள் சக்தி (என்பிபி) சார்பில் போட்டியிட்ட அநுரா குமார திசாநாயக்க (56) பதவியேற்றார்.
அதிபர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அநுரா குமார திசாநாயக்க, இன்று (செப். 23) காலை அதிபர் செயலகத்தில் நடைபெற்ற பதவி ஏற்பு விழாவில் தலைமை நீதிபதி ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 9ஆவது அதிபராக பதவியேற்றார். இதையடுத்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், "இலங்கைக்கு ஒரு புதிய மறுமலர்ச்சி சகாப்தத்தை உருவாக்குவதற்கான உங்கள் பொறுப்பை நிறைவேற்றுவேன் என்று உறுதியளிக்கிறேன். அதற்கான உங்கள் கூட்டுப் பங்களிப்பை எதிர்பார்க்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
What's Your Reaction?