“முஸ்லிம்கள் ஆபத்தில் இல்லை; இந்தியாவில் நிம்மதியாக வாழலாம்!” - நடிகர் விக்ராந்த் மாஸ்ஸி 

“முஸ்லீம்கள் ஆபத்தில் இருக்கிறார்கள்; இந்துக்கள் ஆபத்தில் இருக்கிறார்கள் என்று பலரும் சொல்கிறார்கள். ஆனால் உண்மையில் யாரும் ஆபத்தில் இல்லை. எல்லாமே இங்கு சரியாக தான் இருக்கிறது” என பாலிவுட் நடிகர் விக்ராந்த் மாஸ்ஸி தெரிவித்துள்ளார். 

Nov 12, 2024 - 12:38
 0  11
“முஸ்லிம்கள் ஆபத்தில் இல்லை; இந்தியாவில் நிம்மதியாக வாழலாம்!” - நடிகர் விக்ராந்த் மாஸ்ஸி 

மும்பை: “முஸ்லிம்கள் ஆபத்தில் இருக்கிறார்கள்; இந்துக்கள் ஆபத்தில் இருக்கிறார்கள் என்று பலரும் சொல்கிறார்கள். ஆனால், உண்மையில் யாரும் ஆபத்தில் இல்லை. எல்லாமே இங்கு சரியாக தான் இருக்கிறது” என பாலிவுட் நடிகர் விக்ராந்த் மாஸ்ஸி தெரிவித்துள்ளார்.

கடந்த 2002-ம் ஆண்டு நிகழ்ந்த கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை அடிப்படையாக கொண்டு பாலிவுட்டில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தி சபர்மதி ரிப்போர்ட்’. இந்தப் படம் வரும் நவம்பர் 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதில் விக்ராந்த் மாஸ்ஸி நாயகனாக நடித்துள்ளார். இவர் அண்மையில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற ‘12த் பெயில்’ படத்தின் மூலம் பரவலான ரசிகர்களைப் பெற்றவர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist