மாஞ்சோலை தேயிலை தோட்டத்தை ஏற்று நடத்த தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் ஆலோசனை

மாஞ்சோலை தேயிலை தோட்டத்தை அரசு ஏற்று நடத்த வேண்டும் அல்லது தோட்டத் தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு வழங்க வேண்டும். இது தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Jul 8, 2024 - 22:16
 0  1
மாஞ்சோலை தேயிலை தோட்டத்தை ஏற்று நடத்த தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் ஆலோசனை

மதுரை: மாஞ்சோலை தேயிலை தோட்டத்தை அரசு ஏற்று நடத்த வேண்டும் அல்லது தோட்டத் தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு வழங்க வேண்டும். இது தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நெல்லை மாவட்டம் மாஞ்சோலையைச் சேர்ந்த அமுதா, மாஞ்சோலையிலிருந்து பிபிடிசி நிறுவனம் வெளியேறுவதால் மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு உதவிகள், கலைஞரின் கனவு இல்லம், அரசு ரப்பர் கழகம், களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலயம் மற்றும் அங்கன்வாடிகளில் வேலைவாய்ப்பு, குழந்தைகளுக்கு இலவச கல்வி, மாற்றுப்பணி வழங்கவும், அதுவரை குடும்பத்துக்கு ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்க உத்தரவிட வேண்டும் எனக் கேட்டு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களை அங்கிருந்து வெளியேற்ற தடை விதித்தும், தொழிலாளர்களுக்கு உணவு மற்றும் மின்சார வசதி வழங்கிடவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist