''அரசு போக்குவரத்துக் கழகங்களில் தகுதியற்ற 10,000 பேருந்துகள் இயக்கம்” - சிஐடியு பகீர் குற்றச்சாட்டு
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் ஓட தகுதியற்ற 10 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்படுவதாக சிஐடியு குற்றம் சாட்டியுள்ளது.
விருதுநகர்: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் ஓட தகுதியற்ற 10 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்படுவதாக சிஐடியு குற்றம் சாட்டியுள்ளது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக ஊழியர் சம்மேளனம் - சிஐடியு மாநில நிர்வாகக்குழுக் கூட்டம் விருதுநகரில் இன்று நடைபெற்றது. மாநிலத் தலைவர் சௌந்தர்ராஜன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் அன்பழகன், மண்டல பொதுச் செயலாளர் வெள்ளத்துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
What's Your Reaction?