‘மலிவு’ பேச்சு ட்ரம்ப் Vs ‘தெளிவு’ உரை கமலா: அமெரிக்க பிரச்சாரக் களம் எப்படி? | HTT Explainer

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளர் ட்ரம்ப் தனது பிரச்சாரத்தின்போது, ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸை ‘முட்டாள், அவர் ஓர் இடதுசாரி பைத்தியம்’ என மலிவாக விமர்சித்திருந்தார். இதையடுத்து, ‘கமலா ஹாரிஸ் அமெரிக்கர்கள் அல்லாதவர்களுக்காக செயல்படுபவர்’ என்று குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். அதேவேளையில், கமலா ஹாரிஸ் தனது பிரச்சார உரையில் மிகத் தெளிவுடன் அணுகி வருகிறார்.

Jul 31, 2024 - 10:05
 0  1
‘மலிவு’ பேச்சு ட்ரம்ப் Vs ‘தெளிவு’ உரை கமலா: அமெரிக்க பிரச்சாரக் களம் எப்படி? | HTT Explainer

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளர் ட்ரம்ப் தனது பிரச்சாரத்தின்போது, ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸை ‘முட்டாள், அவர் ஓர் இடதுசாரி பைத்தியம்’ என மலிவாக விமர்சித்திருந்தார். இதையடுத்து, ‘கமலா ஹாரிஸ் அமெரிக்கர்கள் அல்லாதவர்களுக்காக செயல்படுபவர்’ என்று குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். அதேவேளையில், கமலா ஹாரிஸ் தனது பிரச்சார உரையை மிகத் தெளிவுடன் அணுகி வருகிறார்.

கடந்த 21-ம் தேதி அன்று அதிபர் தேர்தலில் இருந்து விலகுவதாக தற்போதைய அதிபர் ஜோ பைடன் அறிவித்தார். அந்த தருணம் முதலே ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ரேஸில் தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸின் கை ஓங்கி இருந்தது. அவருக்கு அதிபர் பைடனும் ஆதரவு தெரிவித்திருந்தார். இந்நிலையில், வலதுசாரி ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் கமலா ஹாரிஸை இனவெறியர் எனவும், பாலியல் ரீதியாக இழிவான வார்த்தைகளை பயன்படுத்தியும் அவரை விமர்சித்து வருகின்றனர். துணை அதிபராக பணியாற்றிவரும் கமலா ஹாரிஸ் தனது பிரச்சாரத்தை தொடங்கிய நாட்களிலிருந்து, அவர் மீதான விமர்சனங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist