மதுரை வைகை ஆற்றில் தங்கக் குதிரை வாகனத்தில் பச்சைப் பட்டு உடுத்தி எழுந்தருளினார் கள்ளழகர்
மதுரை சித்திரைத் திருவிழாவின் 5-ம் நாளான நேற்று அதிகாலை கள்ளழகர் பச்சைப் பட்டு உடுத்தி மதுரை வைகை ஆற்றில் எழுந்தருளினார். அப்போது லட்சக்கணக்கான பக்தர்கள் ‘கோவிந்தா, கோவிந்தா’ என விண்ணதிர கோஷம் எழுப்பி, சுவாமி தரிசனம் செய்தனர்.
மதுரை: மதுரை சித்திரைத் திருவிழாவின் 5-ம் நாளான நேற்று அதிகாலை கள்ளழகர் பச்சைப் பட்டு உடுத்தி மதுரை வைகை ஆற்றில் எழுந்தருளினார். அப்போது லட்சக்கணக்கான பக்தர்கள் ‘கோவிந்தா, கோவிந்தா’ என விண்ணதிர கோஷம் எழுப்பி, சுவாமி தரிசனம் செய்தனர்.
தமிழகத்தின் பிரசித்தி பெற்ற திருவிழாக்களில் ஒன்று மதுரை சித்திரை திருவிழா. இதையொட்டி, மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கடந்த 12-ம் தேதியும், அழகர்கோவில் சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் கடந்த 19-ம் தேதியும் கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது.
What's Your Reaction?