மது ஒழிப்பு `முதல்' அதிகாரப் பகிர்வு வரை; திமுக-வுக்கு நெருக்கடி `டு' ரூட்டை மாற்றிய விசிக?!

`மது ஒழிப்பு மாநாடு, அதிகாரப் பகிர்வு என கூட்டணியில் இருந்துகொண்டே தி.மு.க-வுக்கு குடைச்சல் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார் வி.சி.க தலைவர் திருமாவளவன்' என்ற திமுக-வினர் பேச்சு, அறிவாலயத்தில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் விடுதலை அணி சார்பில் `மது மற்றும் போதை ஒழிப்பு மாநாட்டை' காந்தி ஜயந்தி நாளான வரும் அக்டோபர் 2-ம் தேதி கள்ளக்குறிச்சியில் நடத்தவிருப்பதாக அதிரடியாக அறிவித்தார் அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன். இது தொடர்பாகப் பேசிய திருமாவளவன், `` ஒவ்வொரு கட்சியும் மதுவிலக்கை ஏற்றுக்கொள்கிறார்கள். பிறகு ஏன் தமிழ்நாட்டில் மதுக்கடைகள் இன்னமும் திறந்திருக்கின்றன. என்ன சிக்கல்? பீகார், குஜராத்தில் மட்டும் எப்படி மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படுகிறது? தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளை மூடவேண்டும். மதுவிலக்கு போராட்டத்தை முன்னெடுப்பதால் எந்த விளைவுகள் நேர்ந்தாலும் அதை எதிர்கொள்வதற்கு தயாராக இருக்கிறோம். வரும் சட்டமன்றத் தேர்தலுக்குள் அரசு மதுபானக் கடைகளை மூடினால் எத்தனை விஜய் வந்தாலும் தி.மு.க-தான் வெற்றிபெறும்!" என்றார். திருமாவளவன், மது ஒழிப்பு மாநாடு சலசலப்பை ஏற்படுத்திய விசிக மது ஒழிப்பு மாநாடு அறிவிப்பு:தொடர்ந்து, ``இந்த மாநாடு நடத்துவதால் கூட்டணியில் சிக்கல் வந்தாலும் பரவாயில்லை!" என பகிரங்கமாக அறிவித்தார். திருமாவளவனின் இந்தப் பேச்சு தி.மு.க கூட்டணிக்குள் சலசப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்க அடுத்த அதிரடியாக, ``வி.சி.க நடத்தும் இந்த மாநாட்டுக்கு, மது ஒழிப்பில் உடன்பாடுள்ள அனைவரும், அனைத்துக் கட்சிகளும் கலந்துகொள்ளலாம். அனைவரும் ஒரே மேடையில் இணைய வேண்டிய தேவை இருக்கிறது. வேண்டுமானால் அ.தி.மு.க-வும் மாநாட்டுக்கு வரட்டும். இதைத் தேர்தலோடு பொருத்திப் பார்க்க வேண்டியது இல்லை!" என்று அறிவித்தார். இதை ஜெயக்குமார், விஜயபாஸ்கர் உள்ளிட்ட அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் வரவேற்றுப் பேசினர். இதையடுத்து, `அ.தி.மு.க-வை மாநாட்டுக்கு அழைத்த வி.சி.க! புதிய கூட்டணிக்கு அச்சாரமா?' என்ற விவாதம் தமிழக அரசியலில் சூடுபிடிக்க ஆரம்பித்தது. இருப்பினும், இது குறித்து கேள்விகளுக்கு பட்டும் படாமலும் பதில் சொல்லி நகர்ந்தனர் தி.மு.க-வினர்.`ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு!'அந்தநிலையில்தான், எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றும் விதமாக, `கூட்டணியில் சீட் பகிர்வு போல, ஆட்சியிலும் அதிகாரப் பகிர்வு' என்ற கோஷத்தை முன்வைத்து திருமாவளவன் பேசும் பழைய வீடியோ, அவரது எக்ஸ் தளத்தில் பகிரப்பட்டது. அந்த வீடியோவில், ``இதற்கு முன் தமிழகத்தில் கூட்டணி ஆட்சியென யார் குரலை உயர்த்தியிருக்கிறார்கள் என எனக்குத் தெரியவில்லை. ஆனால், விடுதலைச் சிறுத்தைகள் 2016-லேயே கூட்டணி ஆட்சி வேண்டும் எனப் பேசியிருக்கிறோம். அமைச்சரவையில் அதிகாரப் பகிர்வு வேண்டும். அதிகாரப் பகிர்வுக்கும் இடப்பகிர்வுக்கும் வித்தியாசம் இருக்கிறது. எனக்கும் அதிகாரத்தில் பங்கு வேண்டும். தமிழகத்தில் இதற்கு முன் எந்த இயக்கமும் இப்படிப் பேசியிருப்பதாகத் தெரியவில்லை. இந்த விஷயத்தால்தான் கூட்டணி பேசச் சென்ற போது மூப்பனாருக்கு என்னை நிறையவே பிடித்துப் போனது. தேர்தல் அரசியலில் காலடி எடுத்து வைத்த அப்போதே 'ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு' என்கிற முழக்கத்தை முன்வைத்தேன். நெய்வேலியில் முதல் முதலாக அம்பேத்கர் சிலைக்கு மாலையிட்ட போது நான் முன்வைத்த முழக்கம் 'கடைசி மனிதனுக்கும் ஜனநாயகம், எளிய மக்களுக்கும் அதிகாரம்!' என்பதே. அதிகாரத்தை மக்களுக்கு கொடுக்க வேண்டும். ஜனநாயகத்தை ஒவ்வொரு தனிமனிதனுக்கும் கொடுக்க வேண்டும். இதையெல்லாம் சொல்கிற துணிச்சல் இருக்கிற கட்சி விடுதலை சிறுத்தைகளே!" என்று பேசியிருந்தார். "கடைசி மனிதனுக்கும் சனநாயகம்!எளிய மக்களுக்கும் அதிகாரம்! ஆட்சியிலும் பங்கு !அதிகாரத்திலும் பங்கு ! - என 1999ல் தேர்தல் பாதையில் அடியெடுத்து வைத்த போதே உரத்து முழங்கிய இயக்கம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி " - என்று கடந்த செப்-12 ஆம் தேதி மறைமலை நகரில் நடைபெற்ற மண்டல… pic.twitter.com/ukP8YXsfqR— Thol. Thirumavalavan (@thirumaofficial) September 14, 2024 திருமாவளவன்அமெரிக்கப் பயணத்திலிருந்து முதலமைச்சர் ஸ்டாலின் நாடு திரும்பிய நாளன்று, திருமாவளவனின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்த இந்த அதிகாரப் பகிர்வு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியதோடு, வெகுஜன ஊடகங்களிலும் பெரும் விவாதப் பொருளாக மாறியது. இது மேலும் சர்ச்சையை ஏற்படுத்த திடீரென வீடியோ டெலிட் செய்யப்பட்டது. இது தொடர்பாக விசிக தலைவர் திருமாவளவனிடம் கேட்டபோது, ``அட்மின்தான் வீடியோவை பதிவிட்டார். விசாரிக்கிறேன்'' என்று பதிலளித்துவிட்டு நகர்ந்தார். அதன் பின்னர், "கடைசி மனிதனுக்கும் சனநாயகம்! எளிய மக்களுக்கும் அதிகாரம்! ஆட்சியிலும் பங்கு !அதிகாரத்திலும் பங்கு ! - என 1999ல் தேர்தல் பாதையில் அடியெடுத்து வைத்த போதே உரத்து முழங்கிய இயக்கம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி!" என்ற கேப்ஷனுடன் மீண்டும் அந்த வீடியோவை பதிவிட்டார் திருமாவளவன். இந்த மது ஒழிப்பு மாநாடு, அதிகாரப் பகிர்வு வீடியோ போன்றவையெல்லாம் தி.மு.க-விடம் சீட் பேரம் நடத்துவதற்கான நாடகம் என பா.ஜ.க, புதிய தமிழகம், நா.த.க போன்ற எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் கடுமையாக விமர்சனம் செய்தனர்.திருமாவளவன். மது ஒழிப்பு அதிரடி, நெருக்கடி `டு'ரூட்டை மாற்றிய திருமாவளவன்?இந்த நிலையில், முதலமைச்சர் ஸ்டாலினை அறிவாலயத்தில் சந்தித்த திருமாவளவன் வி.சி.க-வின் மது ஒழிப்பு மாநாட்டுக்கு கலந்துகொள்ள தி.மு.க-வுக்கு அழைப்பு விடுத்தார். அதைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்துப் பேசிய திருமாவளவன், ``அக்டோபர் 2-ம் தேதி வி.சி.க சார்பில் 'மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு' நடத்த உள்ள சூழலில் முக்கியமான கோரிக்கைகள் கொண்ட மனுவை முதலமைச்சரிடம் வழங்கினோம். கோரிக்கைகளில் முதலாவதாக, தமிழ்நாட்டில் அரசு மதுபானக் கடைகளின் விற்பனை இலக்கை படிப்படியாகக் குறைக்க வேண்டும் என்பதாகும். இரண்டாவதாக அர

Sep 17, 2024 - 13:16
 0  1
மது ஒழிப்பு `முதல்' அதிகாரப் பகிர்வு வரை; திமுக-வுக்கு நெருக்கடி `டு' ரூட்டை மாற்றிய விசிக?!

`மது ஒழிப்பு மாநாடு, அதிகாரப் பகிர்வு என கூட்டணியில் இருந்துகொண்டே தி.மு.க-வுக்கு குடைச்சல் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார் வி.சி.க தலைவர் திருமாவளவன்' என்ற திமுக-வினர் பேச்சு, அறிவாலயத்தில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் விடுதலை அணி சார்பில் `மது மற்றும் போதை ஒழிப்பு மாநாட்டை' காந்தி ஜயந்தி நாளான வரும் அக்டோபர் 2-ம் தேதி கள்ளக்குறிச்சியில் நடத்தவிருப்பதாக அதிரடியாக அறிவித்தார் அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன். இது தொடர்பாகப் பேசிய திருமாவளவன், `` ஒவ்வொரு கட்சியும் மதுவிலக்கை ஏற்றுக்கொள்கிறார்கள். பிறகு ஏன் தமிழ்நாட்டில் மதுக்கடைகள் இன்னமும் திறந்திருக்கின்றன. என்ன சிக்கல்? பீகார், குஜராத்தில் மட்டும் எப்படி மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படுகிறது? தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளை மூடவேண்டும். மதுவிலக்கு போராட்டத்தை முன்னெடுப்பதால் எந்த விளைவுகள் நேர்ந்தாலும் அதை எதிர்கொள்வதற்கு தயாராக இருக்கிறோம். வரும் சட்டமன்றத் தேர்தலுக்குள் அரசு மதுபானக் கடைகளை மூடினால் எத்தனை விஜய் வந்தாலும் தி.மு.க-தான் வெற்றிபெறும்!" என்றார்.

திருமாவளவன், மது ஒழிப்பு மாநாடு

சலசலப்பை ஏற்படுத்திய விசிக மது ஒழிப்பு மாநாடு அறிவிப்பு:

தொடர்ந்து, ``இந்த மாநாடு நடத்துவதால் கூட்டணியில் சிக்கல் வந்தாலும் பரவாயில்லை!" என பகிரங்கமாக அறிவித்தார். திருமாவளவனின் இந்தப் பேச்சு தி.மு.க கூட்டணிக்குள் சலசப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்க அடுத்த அதிரடியாக, ``வி.சி.க நடத்தும் இந்த மாநாட்டுக்கு, மது ஒழிப்பில் உடன்பாடுள்ள அனைவரும், அனைத்துக் கட்சிகளும் கலந்துகொள்ளலாம். அனைவரும் ஒரே மேடையில் இணைய வேண்டிய தேவை இருக்கிறது. வேண்டுமானால் அ.தி.மு.க-வும் மாநாட்டுக்கு வரட்டும். இதைத் தேர்தலோடு பொருத்திப் பார்க்க வேண்டியது இல்லை!" என்று அறிவித்தார். இதை ஜெயக்குமார், விஜயபாஸ்கர் உள்ளிட்ட அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் வரவேற்றுப் பேசினர். இதையடுத்து, `அ.தி.மு.க-வை மாநாட்டுக்கு அழைத்த வி.சி.க! புதிய கூட்டணிக்கு அச்சாரமா?' என்ற விவாதம் தமிழக அரசியலில் சூடுபிடிக்க ஆரம்பித்தது. இருப்பினும், இது குறித்து கேள்விகளுக்கு பட்டும் படாமலும் பதில் சொல்லி நகர்ந்தனர் தி.மு.க-வினர்.

`ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு!'

அந்தநிலையில்தான், எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றும் விதமாக, `கூட்டணியில் சீட் பகிர்வு போல, ஆட்சியிலும் அதிகாரப் பகிர்வு' என்ற கோஷத்தை முன்வைத்து திருமாவளவன் பேசும் பழைய வீடியோ, அவரது எக்ஸ் தளத்தில் பகிரப்பட்டது. அந்த வீடியோவில், ``இதற்கு முன் தமிழகத்தில் கூட்டணி ஆட்சியென யார் குரலை உயர்த்தியிருக்கிறார்கள் என எனக்குத் தெரியவில்லை. ஆனால், விடுதலைச் சிறுத்தைகள் 2016-லேயே கூட்டணி ஆட்சி வேண்டும் எனப் பேசியிருக்கிறோம். அமைச்சரவையில் அதிகாரப் பகிர்வு வேண்டும். அதிகாரப் பகிர்வுக்கும் இடப்பகிர்வுக்கும் வித்தியாசம் இருக்கிறது.

எனக்கும் அதிகாரத்தில் பங்கு வேண்டும். தமிழகத்தில் இதற்கு முன் எந்த இயக்கமும் இப்படிப் பேசியிருப்பதாகத் தெரியவில்லை. இந்த விஷயத்தால்தான் கூட்டணி பேசச் சென்ற போது மூப்பனாருக்கு என்னை நிறையவே பிடித்துப் போனது. தேர்தல் அரசியலில் காலடி எடுத்து வைத்த அப்போதே 'ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு' என்கிற முழக்கத்தை முன்வைத்தேன். நெய்வேலியில் முதல் முதலாக அம்பேத்கர் சிலைக்கு மாலையிட்ட போது நான் முன்வைத்த முழக்கம் 'கடைசி மனிதனுக்கும் ஜனநாயகம், எளிய மக்களுக்கும் அதிகாரம்!' என்பதே. அதிகாரத்தை மக்களுக்கு கொடுக்க வேண்டும். ஜனநாயகத்தை ஒவ்வொரு தனிமனிதனுக்கும் கொடுக்க வேண்டும். இதையெல்லாம் சொல்கிற துணிச்சல் இருக்கிற கட்சி விடுதலை சிறுத்தைகளே!" என்று பேசியிருந்தார்.

திருமாவளவன்

அமெரிக்கப் பயணத்திலிருந்து முதலமைச்சர் ஸ்டாலின் நாடு திரும்பிய நாளன்று, திருமாவளவனின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்த இந்த அதிகாரப் பகிர்வு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியதோடு, வெகுஜன ஊடகங்களிலும் பெரும் விவாதப் பொருளாக மாறியது. இது மேலும் சர்ச்சையை ஏற்படுத்த திடீரென வீடியோ டெலிட் செய்யப்பட்டது. இது தொடர்பாக விசிக தலைவர் திருமாவளவனிடம் கேட்டபோது, ``அட்மின்தான் வீடியோவை பதிவிட்டார். விசாரிக்கிறேன்'' என்று பதிலளித்துவிட்டு நகர்ந்தார். அதன் பின்னர், "கடைசி மனிதனுக்கும் சனநாயகம்! எளிய மக்களுக்கும் அதிகாரம்! ஆட்சியிலும் பங்கு !அதிகாரத்திலும் பங்கு ! - என 1999ல் தேர்தல் பாதையில் அடியெடுத்து வைத்த போதே உரத்து முழங்கிய இயக்கம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி!" என்ற கேப்ஷனுடன் மீண்டும் அந்த வீடியோவை பதிவிட்டார் திருமாவளவன். இந்த மது ஒழிப்பு மாநாடு, அதிகாரப் பகிர்வு வீடியோ போன்றவையெல்லாம் தி.மு.க-விடம் சீட் பேரம் நடத்துவதற்கான நாடகம் என பா.ஜ.க, புதிய தமிழகம், நா.த.க போன்ற எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் கடுமையாக விமர்சனம் செய்தனர்.

திருமாவளவன். மது ஒழிப்பு

அதிரடி, நெருக்கடி `டு'ரூட்டை மாற்றிய திருமாவளவன்?

இந்த நிலையில், முதலமைச்சர் ஸ்டாலினை அறிவாலயத்தில் சந்தித்த திருமாவளவன் வி.சி.க-வின் மது ஒழிப்பு மாநாட்டுக்கு கலந்துகொள்ள தி.மு.க-வுக்கு அழைப்பு விடுத்தார். அதைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்துப் பேசிய திருமாவளவன், ``அக்டோபர் 2-ம் தேதி வி.சி.க சார்பில் 'மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு' நடத்த உள்ள சூழலில் முக்கியமான கோரிக்கைகள் கொண்ட மனுவை முதலமைச்சரிடம் வழங்கினோம். கோரிக்கைகளில் முதலாவதாக, தமிழ்நாட்டில் அரசு மதுபானக் கடைகளின் விற்பனை இலக்கை படிப்படியாகக் குறைக்க வேண்டும் என்பதாகும். இரண்டாவதாக அரசமைப்புச் சட்டம் உறுப்பு எண் 47-ன் படி படிப்படியாக மதுவிலக்கை இந்திய அளவில் கொண்டு வருவதற்கு அனைத்து மாநில அரசுகளும் முன்வர வேண்டும் என்பதாகும்.

முதலமைச்சர் ஸ்டாலின் இந்த கோரிக்கை மனுவை படித்துப் பார்த்தார். பின்னர், `தி.மு.க-வின் கொள்கைதான் மதுவிலக்குக் கொள்கை. அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. எனவே நீங்கள் நடத்துகிற மாநாட்டில் தி.மு.க சார்பில் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தித் தொடர்பு செயலாளர் டி.கே.எஸ் இளங்கோவன் ஆகியோர் பங்கேற்பார்கள். இந்த கோரிக்கையை உங்களோடு சேர்ந்து நாங்களும் மத்திய அரசின் கவனத்துக்கு எடுத்துச் செல்ல, அழுத்தம் கொடுக்க விரும்புகிறோம். தமிழ்நாட்டில் மதுவிலக்கு அமலுக்கு வரவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. நிர்வாகச் சிக்கலைக் கருத்தில் கொண்டு மதுவிலக்கை படிப்படியாக எவ்வாறு நிறைவேற்ற முடியுமோ அவ்வாறு நடைமுறைப்படுத்துவோம்! என முதலமைச்சர் உறுதியளித்திருக்கிறார்" என்றார்.

முதலமைச்சரை சந்தித்த திருமாவளவன்

மேலும், `ஆட்சியில் பங்கு; அதிகாரத்தில் பங்கு’ என நான் பேசியது பற்றி முதலமைச்சரிடம் எதுவும் பேசவில்லை. ஏனென்றால், 1999-ல் இருந்தே நான் பேசி வரும் கருத்துதான். அதை எப்போது வலுவாகப் பேசவேண்டுமோ அப்போது வலுவாகப் பேசுவோம். அதேபோல, தேர்தலுக்கும் இப்போதைய மாநாட்டுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஆயிரக்கணக்கான கைம்பெண்களின் கோரிக்கையை முன்னிறுத்தியே இந்த மாநாட்டை நாங்கள் நடத்துகிறோம். இதை திசைதிருப்பும் வகையில் தேர்தல் அரசியலோடு பிணைத்துப் பார்க்க வேண்டாம். தி.மு.க-வும் வி.சி.க-வுக்கும் இடையே எந்த விரிசலும் இல்லை; நெருடலும் இல்லை. தி.மு.க கூட்டணியில் தொடர்வதில் உறுதியாகவே இருக்கிறோம்!" என்று முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்த பிறகு திருமாவளவன் கருத்து தெரிவித்திருக்கிறார்.

தொடக்கத்தில் `மது ஒழிப்பு, படிப்படியாக மதுக்கடைகள் குறைப்பு' என்று அதிரடியாகப் பேசி வந்தவர், முதலமைச்சரை சந்தித்து வந்தபிறகு `மது விற்பனை இலக்கு குறைப்பு, ஒன்றிய அரசிடம் கோரிக்கை' என்று ரூட்டை மாற்றிவிட்டாரே திருமாவளவன்' என்று எதிர்க்கட்சியினர் விமர்சனம் செய்து வருகின்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/47zomWY

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist