திமுக வரலாறு: `ஒருநாள் வருவோம்' - சூளுரைத்த அண்ணா; பவள விழா கொண்டாடும் திமுக | Long Read

வெள்ளையர்கள் வெளியேறி விட்டார்கள். இந்தியா விடுதலை பெற்றது. ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம் என நாடே மகிழ்ச்சி கழிப்பில் இருந்தபோது ஒருவர் மட்டும் இவ்வாறு கூறினார்," நாம் இன்னும் சுதந்திரம் அடையவில்லை. இதுவரை பிரிட்டிஷ்காரனிடம் அடிமைப்பட்டு கிடந்தோம். இனிமேல், இந்த டெல்லி காரனிடம் அடிமையாக இருக்கப் போகிறோம். ஆட்சி கை மாறி இருக்கிறதே தவிர நாம் அடிமைகள் தான். எனவே ஆகஸ்ட் 15 நமக்கு துக்க நாள்", என்றார். அந்த ஒருவர்தான் திராவிட மக்களின் உரிமைக்குரலாக ஓங்கி ஒலித்த தந்தை பெரியார் ஈ. வெ.ராமசாமி. அவருடைய திராவிடர் கழகத்தின் பயிற்சி பட்டறையில் பட்டை தீட்டப்பட்ட கூர்வாள் தான் பேரறிஞர் அண்ணா. 'நாங்கள் இந்தியர்கள்! எங்கள் நாடு பாரதம்! ' என இந்திய துணைக்கண்டம் முழுக்க கூக்குரலிட்டபோது, "நாங்கள் திராவிடர்கள். எங்கள் நாடு திராவிட நாடு. அடைந்தே தீருவோம் தனி திராவிட நாடு." என்று தன்னுரிமை கோரிக்கையை முன்வைத்து எதிர்குரல் முழங்கினார்கள் திராவிடர் கழக தோழர்கள். அவ்வுரிமை நாதத்தின் அடித்தோன்றலில் விளைந்தது தான் திராவிட முன்னேற்ற கழகம். ராபின்சன் பூங்காதிராவிட முன்னேற்றக் கழகம் தொடக்கம்இந்தியா சுதந்திரம் பெற்று 2 ஆண்டுகளில் 1949 செப்டம்பர் 17ஆம் நாள் சென்னை ராபின்சன் பூங்காவில் வைத்து திராவிட முன்னேற்றக் கழகத்தை தொடங்கினார் அண்ணா. பெரியாருடன் அண்ணாவுக்கு ஏற்பட்ட முரண்பாடுதான் திராவிட முன்னேற்றக் கழக தோற்றத்திற்கு ஆரம்ப புள்ளி என்றாலும் கொள்கை கோட்பாட்டளவில் பெரிய மாறுபாடு இருக்கவில்லை. அதனால் தான் திமுகவை தொடங்கிய அன்று பேசிய அண்ணா, திராவிட முன்னேற்றக் கழகம் தோன்றியது திராவிடர் கழகத்திற்கு போட்டியாக அல்ல அதே கொள்கை பாதையில் தான் திராவிடர் கழகத்தின் அடிப்படை கொள்கை மீதேதான் திராவிட முன்னேற்றக் கழகம் அமைக்கப்பட்டுள்ளது. அடிப்படைக் கொள்கைகளில் கருத்துக்களில் மாறுதல் மோதல் எதுவும் கிடையாது என்று அறிவித்தார். மேலும் நமக்கெல்லாம் அப்போது நல்வழி காட்டிய பெரியார் அமர்ந்த பீடத்தை தலைவர் பதவி நாற்காலியை காலியாகவே வைத்திருக்கிறோம் என்று கூறி திமுகவின் பொதுச் செயலாளராகவே பதவி ஏற்றுக்கொண்டார் அண்ணா. கருப்பும் சிவப்பும் சரி பாதி நிறமாக கட்சிக் கொடி அறிமுகப்படுத்தப்பட்டது. "கடமை, கண்ணியம், கட்டுப்பாடு அடைய வேண்டிய இலக்கோ, திராவிட நாடு" என கொள்கை முழக்கமிட்டு வந்த திராவிட முன்னேற்றக் கழகம் 1952 ஆம் ஆண்டு நடைபெற்ற சுதந்திர இந்தியாவின் முதல் பொதுத் தேர்தலில் போட்டியிட மறுத்தது, காரணம், திராவிடர்களின் கருத்தை அறியாமலும் திராவிடர்களின் ஜீவதார உரிமைக்கு ஊறு செய்யும் வகையிலும் ஒரே கட்சியரின் எதேச்சதிகார முறைப்படியும் தயாரிக்கப்பட்ட இந்திய அரசியல் சட்டத்தை தி.மு.க கண்டிப்பதன் அறிகுறியாக தேர்தலில் திமுக தன் வேட்பாளர்களை நிறுத்தவில்லை எனக்கூறியது. இருப்பினும் தங்கள் கொள்கைகளை திராவிட நாடு கோரிக்கையை ஏற்கும் கட்சியின் வேட்பாளர்களை மட்டும் ஆதரிப்பதாக அறிவித்தது திராவிட முன்னேற்ற கழகம். குலக்கல்வி திட்டத்தை எதிர்த்து போராட்டம்அதனைத் தொடர்ந்து 1953 ஆம் ஆண்டு அன்றைய முதல்வர் காங்கிரஸ் கட்சியின் ராஜாஜி கொண்டு வந்த குலக்கல்வி திட்டத்தை எதிர்த்து போராட்டம், சித்தூர் தமிழர்களின் போராட்டத்தை 'நான்சென்ஸ்' என்று கூறிய பிரதமர் நேருவை எதிர்த்து கருப்புக்கொடி போராட்டம், கள்ளக்குடியை டால்மியாபுரம் என பெயர் மாற்றியதை கண்டித்து ரயில் மறியல் என அடுத்தடுத்த மும்முனை போராட்டங்களால் மக்கள் மத்தியில் பெரும் செல்வாக்கை பெறத் தொடங்கியது திராவிட முன்னேற்ற கழகம். இந்த கல்லக்குடி போராட்ட வெற்றி தான் பின்னாட்களில் மு.கருணாநிதியை 'கல்லக்குடி கொண்ட கருணாநிதி' என்று அழைக்கப்பட காரணமாக அமைந்தது. தி.மு.க.வின் முதல் தேர்தல்; அண்ணாவின் சூளுரை1956 ஆம் ஆண்டு திருச்சியில் நடைபெற்ற திமுக மாநாட்டில் தேர்தலில் பங்கேற்கலாமா வேண்டாமா என்பது குறித்து பொது வாக்கெடுப்பை நடத்தியது திமுக. மொத்தம் 60,000-க்கும் மேற்பட்ட தொண்டர்கள் பங்கேற்ற அந்த பொது வாக்கெடுப்பில் தேர்தலில் போட்டியிட வேண்டும் என 56 ,942 பேரும், வேண்டாம் என 4203 பேரும் வாக்களித்து இருந்தார்கள். திமுக இனிவரும் தேர்தல்களில் போட்டியிடுவது அக்கட்சியின் ஜனநாயக முறைப்படி உறுதி செய்யப்பட்டது. அதே ஆண்டு நவம்பர் ஒன்றாம் நாள் இந்தியா மொழி வாரி மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டு சென்னை மாகாணத்தில் இருந்த கேரளா, கர்நாடகம் உள்ளிட்ட பகுதிகள் தனி மாநிலங்களாயின. அதற்கு முன்னதாக 1953 ஆம் ஆண்டு ஆந்திர பிரதேசம், முதல் மொழி வாரி மாநிலமாக உருவாகியிருந்தது. அதன் பிறகு 1957ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின் போட்டியிட்ட திமுக 15 சட்டமன்ற தொகுதிகளிலும் இரண்டு நாடாளுமன்ற தொகுதிகளிலும் வெற்றி வாகை சூடியது. சி.என்.அண்ணாதுரை, மு.கருணாநிதி, க. அன்பழகன் உள்ளிட்ட திமுகவின் முன்னணி தலைவர்கள் சட்டமன்ற உறுப்பினர்களாக தேர்வானார்கள். முதல் தேர்தலிலே திமுக வின் வெற்றி காங்கிரஸ் கட்சியின்் எஃகுகோட்டையை சற்றே அசைத்துப் பார்த்தது. முதன் முறையாக சட்டமன்றத்துக்குள் தடம் பதித்த திமுக தனது கொள்கையில் ஒன்றை செயல்படுத்த முயன்றது. அதாவது, சென்னை மாகாணம் என்ற பெயரை தமிழ்நாடு மாநிலமாக மாற்றக்கூடிய தீர்மானத்தை கொண்டு வரவே, ஓட்டெடுப்பில் தோற்கடிக்கப்பட்டது அந்தத் தீர்மானம். திமுகவின் இந்தத் தீர்மானத்திற்கு பின்னணியில் தியாகி சங்கரலிங்கனாரின் உயிர் கொடையும் இருந்தது. அதன் பின்னர் நடந்த சட்டமன்ற கூட்டத் தொடரில்," நாங்கள் இந்த சபைக்குள் நுழைந்தது என்றைக்கும் எதிர் அங்கத்தினர்களாகவே இருப்பதற்காக அல்ல இன்றைக்கில்லாவிட்டாலும் என்றைக்காவது ஒருநாள் ஆட்சி பொறுப்பை ஏற்கத்தான் போகிறோம்", என சூளுரைத்தார் அண்ணாதுரை. திராவிட நாடு கோரிக்கையை கைவிட்டார் அண்ணா 1958 ஆம் ஆண்டு மார்ச் இரண்டாம் நாள் இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக திமுக வலுப்பெற்றது. உதயசூரியன் அந்தக் கட்சியின் சின்னமானது. பின் 1962 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் போட்டியிட்ட திமுக 50 சட்டமன்றத் தொகுதிகளையும் 7 நாடாளுமன்ற தொக

Sep 17, 2024 - 13:16
 0  2
திமுக வரலாறு: `ஒருநாள் வருவோம்' - சூளுரைத்த அண்ணா; பவள விழா கொண்டாடும் திமுக | Long Read
வெள்ளையர்கள் வெளியேறி விட்டார்கள். இந்தியா விடுதலை பெற்றது. ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம் என நாடே மகிழ்ச்சி கழிப்பில் இருந்தபோது ஒருவர் மட்டும் இவ்வாறு கூறினார்,

" நாம் இன்னும் சுதந்திரம் அடையவில்லை. இதுவரை பிரிட்டிஷ்காரனிடம் அடிமைப்பட்டு கிடந்தோம். இனிமேல், இந்த டெல்லி காரனிடம் அடிமையாக இருக்கப் போகிறோம். ஆட்சி கை மாறி இருக்கிறதே தவிர நாம் அடிமைகள் தான். எனவே ஆகஸ்ட் 15 நமக்கு துக்க நாள்", என்றார். அந்த ஒருவர்தான் திராவிட மக்களின் உரிமைக்குரலாக ஓங்கி ஒலித்த தந்தை பெரியார் ஈ. வெ.ராமசாமி. அவருடைய திராவிடர் கழகத்தின் பயிற்சி பட்டறையில் பட்டை தீட்டப்பட்ட கூர்வாள் தான் பேரறிஞர் அண்ணா. 'நாங்கள் இந்தியர்கள்! எங்கள் நாடு பாரதம்! ' என இந்திய துணைக்கண்டம் முழுக்க கூக்குரலிட்டபோது, "நாங்கள் திராவிடர்கள். எங்கள் நாடு திராவிட நாடு. அடைந்தே தீருவோம் தனி திராவிட நாடு." என்று தன்னுரிமை கோரிக்கையை முன்வைத்து எதிர்குரல் முழங்கினார்கள் திராவிடர் கழக தோழர்கள். அவ்வுரிமை நாதத்தின் அடித்தோன்றலில் விளைந்தது தான் திராவிட முன்னேற்ற கழகம்.

இந்தியா சுதந்திரம் பெற்று 2 ஆண்டுகளில் 1949 செப்டம்பர் 17ஆம் நாள் சென்னை ராபின்சன் பூங்காவில் வைத்து திராவிட முன்னேற்றக் கழகத்தை தொடங்கினார் அண்ணா. பெரியாருடன் அண்ணாவுக்கு ஏற்பட்ட முரண்பாடுதான் திராவிட முன்னேற்றக் கழக தோற்றத்திற்கு ஆரம்ப புள்ளி என்றாலும் கொள்கை கோட்பாட்டளவில் பெரிய மாறுபாடு இருக்கவில்லை. அதனால் தான் திமுகவை தொடங்கிய அன்று பேசிய அண்ணா, திராவிட முன்னேற்றக் கழகம் தோன்றியது திராவிடர் கழகத்திற்கு போட்டியாக அல்ல அதே கொள்கை பாதையில் தான் திராவிடர் கழகத்தின் அடிப்படை கொள்கை மீதேதான் திராவிட முன்னேற்றக் கழகம் அமைக்கப்பட்டுள்ளது. அடிப்படைக் கொள்கைகளில் கருத்துக்களில் மாறுதல் மோதல் எதுவும் கிடையாது என்று அறிவித்தார். மேலும் நமக்கெல்லாம் அப்போது நல்வழி காட்டிய பெரியார் அமர்ந்த பீடத்தை தலைவர் பதவி நாற்காலியை காலியாகவே வைத்திருக்கிறோம் என்று கூறி திமுகவின் பொதுச் செயலாளராகவே பதவி ஏற்றுக்கொண்டார் அண்ணா. கருப்பும் சிவப்பும் சரி பாதி நிறமாக கட்சிக் கொடி அறிமுகப்படுத்தப்பட்டது. "கடமை, கண்ணியம், கட்டுப்பாடு அடைய வேண்டிய இலக்கோ, திராவிட நாடு" என கொள்கை முழக்கமிட்டு வந்த திராவிட முன்னேற்றக் கழகம் 1952 ஆம் ஆண்டு நடைபெற்ற சுதந்திர இந்தியாவின் முதல் பொதுத் தேர்தலில் போட்டியிட மறுத்தது, காரணம், திராவிடர்களின் கருத்தை அறியாமலும் திராவிடர்களின் ஜீவதார உரிமைக்கு ஊறு செய்யும் வகையிலும் ஒரே கட்சியரின் எதேச்சதிகார முறைப்படியும் தயாரிக்கப்பட்ட இந்திய அரசியல் சட்டத்தை தி.மு.க கண்டிப்பதன் அறிகுறியாக தேர்தலில் திமுக தன் வேட்பாளர்களை நிறுத்தவில்லை எனக்கூறியது. இருப்பினும் தங்கள் கொள்கைகளை திராவிட நாடு கோரிக்கையை ஏற்கும் கட்சியின் வேட்பாளர்களை மட்டும் ஆதரிப்பதாக அறிவித்தது திராவிட முன்னேற்ற கழகம்.

குலக்கல்வி திட்டத்தை எதிர்த்து போராட்டம்

அதனைத் தொடர்ந்து 1953 ஆம் ஆண்டு அன்றைய முதல்வர் காங்கிரஸ் கட்சியின் ராஜாஜி கொண்டு வந்த குலக்கல்வி திட்டத்தை எதிர்த்து போராட்டம், சித்தூர் தமிழர்களின் போராட்டத்தை 'நான்சென்ஸ்' என்று கூறிய பிரதமர் நேருவை எதிர்த்து கருப்புக்கொடி போராட்டம், கள்ளக்குடியை டால்மியாபுரம் என பெயர் மாற்றியதை கண்டித்து ரயில் மறியல் என அடுத்தடுத்த மும்முனை போராட்டங்களால் மக்கள் மத்தியில் பெரும் செல்வாக்கை பெறத் தொடங்கியது திராவிட முன்னேற்ற கழகம். இந்த கல்லக்குடி போராட்ட வெற்றி தான் பின்னாட்களில் மு.கருணாநிதியை 'கல்லக்குடி கொண்ட கருணாநிதி' என்று அழைக்கப்பட காரணமாக அமைந்தது.

தி.மு.க.வின் முதல் தேர்தல்; அண்ணாவின் சூளுரை

1956 ஆம் ஆண்டு திருச்சியில் நடைபெற்ற திமுக மாநாட்டில் தேர்தலில் பங்கேற்கலாமா வேண்டாமா என்பது குறித்து பொது வாக்கெடுப்பை நடத்தியது திமுக. மொத்தம் 60,000-க்கும் மேற்பட்ட தொண்டர்கள் பங்கேற்ற அந்த பொது வாக்கெடுப்பில் தேர்தலில் போட்டியிட வேண்டும் என 56 ,942 பேரும், வேண்டாம் என 4203 பேரும் வாக்களித்து இருந்தார்கள். திமுக இனிவரும் தேர்தல்களில் போட்டியிடுவது அக்கட்சியின் ஜனநாயக முறைப்படி உறுதி செய்யப்பட்டது. அதே ஆண்டு நவம்பர் ஒன்றாம் நாள் இந்தியா மொழி வாரி மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டு சென்னை மாகாணத்தில் இருந்த கேரளா, கர்நாடகம் உள்ளிட்ட பகுதிகள் தனி மாநிலங்களாயின. அதற்கு முன்னதாக 1953 ஆம் ஆண்டு ஆந்திர பிரதேசம், முதல் மொழி வாரி மாநிலமாக உருவாகியிருந்தது. அதன் பிறகு 1957ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின் போட்டியிட்ட திமுக 15 சட்டமன்ற தொகுதிகளிலும் இரண்டு நாடாளுமன்ற தொகுதிகளிலும் வெற்றி வாகை சூடியது. சி.என்.அண்ணாதுரை, மு.கருணாநிதி, க. அன்பழகன் உள்ளிட்ட திமுகவின் முன்னணி தலைவர்கள் சட்டமன்ற உறுப்பினர்களாக தேர்வானார்கள். முதல் தேர்தலிலே திமுக வின் வெற்றி காங்கிரஸ் கட்சியின்் எஃகுகோட்டையை சற்றே அசைத்துப் பார்த்தது. முதன் முறையாக சட்டமன்றத்துக்குள் தடம் பதித்த திமுக தனது கொள்கையில் ஒன்றை செயல்படுத்த முயன்றது. அதாவது, சென்னை மாகாணம் என்ற பெயரை தமிழ்நாடு மாநிலமாக மாற்றக்கூடிய தீர்மானத்தை கொண்டு வரவே, ஓட்டெடுப்பில் தோற்கடிக்கப்பட்டது அந்தத் தீர்மானம். திமுகவின் இந்தத் தீர்மானத்திற்கு பின்னணியில் தியாகி சங்கரலிங்கனாரின் உயிர் கொடையும் இருந்தது. அதன் பின்னர் நடந்த சட்டமன்ற கூட்டத் தொடரில்," நாங்கள் இந்த சபைக்குள் நுழைந்தது என்றைக்கும் எதிர் அங்கத்தினர்களாகவே இருப்பதற்காக அல்ல இன்றைக்கில்லாவிட்டாலும் என்றைக்காவது ஒருநாள் ஆட்சி பொறுப்பை ஏற்கத்தான் போகிறோம்", என சூளுரைத்தார் அண்ணாதுரை.

திராவிட நாடு கோரிக்கையை கைவிட்டார் அண்ணா

1958 ஆம் ஆண்டு மார்ச் இரண்டாம் நாள் இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக திமுக வலுப்பெற்றது. உதயசூரியன் அந்தக் கட்சியின் சின்னமானது. பின் 1962 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் போட்டியிட்ட திமுக 50 சட்டமன்றத் தொகுதிகளையும் 7 நாடாளுமன்ற தொகுதிகளையும் கைப்பற்றியது. ஆனால் இந்தத் தேர்தலில் யாரும் எதிர்பாராத வகையில் அண்ணா தோல்வியைச் சந்தித்தார். இருப்பினும் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களால் மாநிலங்கள் அவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு, நாடாளுமன்றத்திற்கு அனுப்பப்பட்டார் அண்ணா. 1963 ஆம் ஆண்டு தனிநாடு கேட்பது குற்றம் என்றும் பிரிவினைவாதம் பேசுவோர் தேர்தலில் போட்டியிட முடியாதபடியும் பிரிவினை தடுப்புச் சட்ட மசோதாவை நிறைவேற்றியது மத்தியில் ஆண்ட காங்கிரஸ் கட்சி. இது திமுகவை முடக்குவதற்காகவே கொண்டுவரப்பட்ட சட்டம் எனக் கருதி அண்ணா பல்வேறு ஆலோசனைகளுக்குப் பிறகு தேர்தல் அரசியலில் தொடர்ந்து ஈடுபடுவதற்காக திராவிட நாடு கோரிக்கையை கைவிட்டார். மேலும் கட்சியின் விதி இரண்டுல் திராவிட நாடு என்று இருந்த குறிக்கோளுக்கு பதிலாக தமிழகம், ஆந்திரம், கேரளம், கர்நாடகமாகிய நான்கு மொழி வழி மாநிலங்களும் இந்திய அரசுரிமை, ஒருமைத்தன்மை, அரசியலமைப்பு சட்டம் ஆகியவற்றுக்குள் இயன்ற அளவு கூடுதலான அதிகாரங்களை பெற்று நெருங்கிய திராவிட கூட்டமைப்பாக நிலவ பாடுபடுவது எனத் திருத்தம் மேற்கொண்டார். திமுகவின் உயிர்நாடியாக இருந்த திராவிட நாடு கோரிக்கையைக் கைவிட்டது பெரும் விமர்சனங்களுக்கு உள்ளானது. இருப்பினும், திராவிட நாட்டுக்கான காரணங்கள் அப்படியேதான் இருக்கின்றன என தனது இக்கட்டான சூழலை வெளிப்படுத்தினார் அண்ணா.

மொழிப் போராட்டம்

1965 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் நாள் முதல் இந்தி மட்டுமே இந்தியாவின் ஆட்சி மொழியாக இருக்கும் என்ற சட்டம் முன் வரைவை அப்போதைய காங்கிரஸ் அரசின் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி கொண்டு வந்தார். இதனால் வெகுண்டு எழுந்த தமிழகம், மாபெரும் மொழிப் போராட்டத்தை கையில் எடுத்தது. திமுக ஜனவரி 26 குடியரசு நாளை துக்க நாளாக அறிவித்து கிளர்ச்சிகளில் ஈடுபட்டது. இந்தப் போராட்டத்தில் திமுகவின் மாணவரணி தீவிரமாகச் செயல்பட்டது. தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறையும் ராணுவமும் நடத்திய துப்பாக்கி சூட்டில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தார்கள். பணிந்த மத்திய அரசு பிப்ரவரி 11-ம் நாள் அன்று ஆங்கிலமே அலுவல் மொழியாகத் தொடரும் என்று அறிவிப்பை வெளியிட போராட்டம் முடிவுக்கு வந்தது. இந்தப் போராட்டத்திற்கு அரணாக திமுக மாபெரும் பங்களிப்பை நிகழ்த்தியது என்பதை எவராலும் மறுக்க முடியாத வரலாற்று பதிவானது. அதனை தொடர்ந்து, 1967 ஆம் ஆண்டு தேர்தல் தமிழக அரசியல் களத்தில் மாபெரும் திருப்புமுனையாக அமைந்தது.

அண்ணாவின் சட்டமன்ற சூளுரை நிஜமானது.

அண்ணாவின் திராவிட முன்னேற்றக் கழகம், ராஜாஜியின் சுதந்திராக் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மாபோசியின் தமிழரசு கழகம், சி. பா.ஆதித்தனாரின் நாம் தமிழர் இயக்கம் உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து வலுவான கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்தித்தது. அண்ணாவின் சட்டமன்ற சூளுரை நிஜமானது. 173 தொகுதிகளில் போட்டியிட்ட திமுக 138 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்றது. நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட 25 இடங்களிலும் வென்றது. தென் சென்னையில் போட்டியிட்ட அண்ணா நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார். திமுகவின் இந்த அமோக வெற்றி, வரலாற்றையே புரட்டி போட்டதாக இன்றுவரையிலும் பார்க்கப்படுகிறது. காரணம், சுதந்திரம் பெற்றுத் தந்த கட்சி, இந்திய தேசத்தின் மாபெரும் கட்சி, பெருந்தலைவர் காமராஜர் இருந்த காங்கிரசை, தமிழக மக்கள் புறந்தள்ளியதும் இறை மறுப்பு, இந்திய எதிர்ப்பு, திராவிட நாடு கோரிய திமுகவை ஆதரித்து ஆட்சிக் கட்டிலில் அமர்த்தியதும் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. அதன் பிறகு, அண்ணாவை பெயராகவும் அடையாளமாகவும் கொண்ட கட்சிகளே இன்று வரையிலும் தமிழ்நாட்டு அரசியலை அலங்கரித்து வருகின்றன என்பதே நிகழும் வரலாற்றுச் சாட்சி.

அண்ணாதுரை தமிழக முதல்வர் ஆனார்

திமுக தொண்டர்களின் வேண்டுகோளுக்கிணங்க தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து 1967ஆம் ஆண்டு மார்ச் ஆறாம் நாள் பேரறிஞர் அண்ணாதுரை தமிழக முதல்வர் ஆனார். திமுக முதல்முறையாக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தது. பதினெட்டு ஆண்டு காலம் முரண்களைக் கடந்து நேரில் சென்று திமுகவின் வெற்றியை பெரியாருக்கு சமர்ப்பித்தார் அண்ணா. ஆட்சிப் பொறுப்பேற்றது முதற்கொண்டே பல அதிரடி மாற்றங்களை ஏற்படுத்தியது திமுக. சென்னை மாகாணம் தமிழ்நாடு மாநிலமாக பெயர் மாற்றம் பெற்றது. இந்த முறை சங்கரலிங்கனாரின் உயிர் தியாகம் பலன் பெற்றது. கவர்மென்ட் ஆப் மெட்ராஸ் `தமிழக அரசு' ஆனது. `சத்தியமேவ ஜெயதே, ' வாய்மையே வெல்லும்' என்றானது. சமஸ்கிருத மணிப்பிரவாள நடை மெல்ல மெல்ல மறையத் தொடங்கி தனித்தமிழ் மேலெழுந்து வந்தது. சுயமரியாதைத் திருமணச் சட்டம், பேருந்துகள் நாட்டுடைமையாக்கம், கல்வியில் தமிழுக்கு முதலிடம், இரு மொழிக் கொள்கை, உலகத்தமிழ் மாநாடுகள் என அதிகாரத்தைக் கைப்பற்றிய திமுக பெரியாரின் கனவுகளையும் சேர்த்துத் தங்கள் கொள்கைகளை எல்லாம் சாதித்துக் காட்டியது. ஆனால் இந்தச் சாதனை பட்டியல் வீழ்வதற்குள்ளாகவே அண்ணா தனது மூச்சை நிறுத்திக் கொண்டார்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அமெரிக்காவில் சிகிச்சைகளை முடித்துவிட்டு தாயகம் திரும்பிய அண்ணா, 1969 ஆம் ஆண்டு பிப்ரவரி மூன்றாம் நாள் திராவிட மண்ணை விட்டு மறைந்தார். அண்ணாவின் குறுகிய கால சாதனைகள் போலவே அவரின் இறுதி ஊர்வலத்தில் சுமார் ஒன்றரை கோடி மக்கள் கலந்துகொண்டதாக கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றது.

கருணாநிதி முதல்வர்

அண்ணாவின் மறைவுக்குப் பிறகு அடுத்த முதல்வர் யார் என்ற போட்டி கருணாநிதிக்கும் நெடுஞ்செழியனுக்கும் இடையே போட்டி ஏற்பட்டது. இறுதியில் கருணாநிதி முதல்வர் ஆனார். பிறகு ஜூன் மாத காலத்தில் திமுகவின் தலைவராக மு.கருணாநிதியும் பொதுச்செயலாளராக இரா. நெடுஞ்செழியனும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 1971 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் கருணாநிதி தலைமையில் தேர்தலை சந்தித்த திமுக 203 தொகுதிகளில் போட்டியிட்டு 184 தொகுதிகளில் வரலாறு காணாத வெற்றி பெற்றது.

இதுவரையில் எந்தக் கட்சியாலும் முறியடிக்க முடியாத சாதனையை நிகழ்த்தி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது திமுக. கருணாநிதி இரண்டாவது முறையாக முதல்வரானார். மேலும் நாடாளுமன்றத் தேர்தலில் 25 இடங்களிலும் வென்றது திமுக. 1972 ஆம் ஆண்டு திமுகவின் பொருளாளராக இருந்த எம்.ஜி.ஆர் கட்சியின் பல நிலைகளிலும் ஓரங்கட்டப்பட்டு வந்தார். ஏற்கெனவே கட்சியின் மீது அதிருப்தியில் இருந்தவர், திமுகவின் பொதுக் கூட்டம் மேடையிலேயே கட்சியின் மீது ஊழல் குற்றச்சாட்டை முன்வைத்தார். 'ஊழல் புகாரைப் பொய்யாக்க வேண்டும் என்றால் திமுகவின் தலைவர் முதல், கிளைச் செயலாளர் வரை அனைவரும் தங்கள் சொத்து விவரங்களைக் காட்ட வேண்டும்' என்றார். எம்ஜிஆரின் இத்தகைய பேச்சால் அதிர்ந்து போன திமுக தலைமை அவரை கட்சியை விட்டே நீக்கியது. திமுகவிலிருந்து பிரிந்து சென்ற எம்.ஜி.ஆர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை தொடங்கினார். கட்சியின் கொடியிலும் பெயரிலும் அண்ணாவே இடம் பெற்றார். இதற்கு முன்பாக 1961 ஆம் ஆண்டு திமுகவிலிருந்து பிரிந்து சென்ற ஈ.வி.கே சம்பத், தமிழ் தேசியக் கட்சியை தொடங்கியிருந்தார். ஆனால் காலப்போக்கில் அந்தக் கட்சி காங்கிரஸுடன் கலந்து கரைந்து போனது. ஆனால் அதிமுகவின் எதிர்காலம் பின் நாட்களில் திமுகவிற்கே நிரந்தர போட்டியாகும் அளவிற்கு விஸ்வரூபம் எடுத்தது.

மாநில சுயாட்சி

1974 ஆம் ஆண்டு மாநில சுயாட்சி பெரும் தீர்மானத்தை சட்டமன்றத்தில் நிறைவேற்றியது திமுக. 1975 ஆம் ஆண்டு இந்திராவின் காங்கிரஸ் அரசு அவசரநிலை பிரகடனத்தை அறிவித்தது. இதனை எதிர்த்து முதல் ஆளாகத் தீர்மானம் நிறைவேற்றியது திமுக அரசு. அதனைத் தொடர்ந்து முறையற்ற ஆட்சி, வீராண திட்ட முறைகேடு என விஞ்ஞான ஊழல் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு திமுக ஆட்சி கலைக்கப்பட்டது. வைகோ, ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவின் முதன்மை தலைவர்கள் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறைப்படுத்தப்பட்டார்கள். ஆனால் இந்த ஆட்சிக்கலைப்பிற்கு பின்னால் நெருக்கடி நிலைக்கு எதிராக திமுக செயல்பட்டதே காரணம் என்றனர் அரசியல் விமர்சகர்கள். 1977 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே அபார வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது எம்.ஜி.ஆரின் அதிமுக. திமுக கடும் தோல்வியைச் சந்தித்தது. அப்போது முதல் எம்ஜிஆர் உயிருடன் இருக்கும் வரை சுமார் 13 ஆண்டுகள் திமுகவை அரியணை ஏறவிடாமல் எதிர்க்கட்சி ஆகவே இருக்க செய்தது அதிமுக. எம்ஜிஆரின் மறைவிற்குப் பிறகு 1989 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியைப் பிடித்தது திமுக. ஆனால் 1991 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் அமைப்பை கட்டுப்படுத்தத் தவறிவிட்டது.

பிரிவினை சக்திகளுக்கு திமுக ஊக்கமளிக்கிறது என்று கூறி அப்போதைய ராஜீவ் காந்தி அரசால் இரண்டாவது முறையாகக் கலைக்கப்பட்டது திமுக அரசு. அதே ஆண்டு மே மாதம் பிரசாரத்துக்காக தமிழகம் வந்த ராஜீவ் காந்தி கொல்லப்படவே எழுந்த அனுதாப அலையால் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்த அதிமுக வெற்றி பெற்றது.

திமுக படுதோல்வியைச் சந்தித்தது. 1993 ஆம் ஆண்டு வைகோவின் அரசியல் நலனுக்காக விடுதலைப்புலிகள் கருணாநிதியைக் கொலை செய்யத் திட்டமிட்டுள்ளனர் எனக் காரணம் கூறி வைகோ திமுகவிலிருந்து நீக்கப்பட்டார். இதற்குப் பின்னால் ஸ்டாலினின் அரசியல் எதிர்காலம் ஒளிந்திருப்பதாக அப்போது விமர்சிக்கப்பட்டது. 1996 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. 1999 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின் போது தனது கொள்கைக்கு நேர் எதிரான பாஜகவுடன் கூட்டணி அமைத்த திமுக பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டது. இதே கூட்டணி 2001 ஆம் ஆண்டு தேர்தலிலும் தொடர அக்கட்சி பெரும் தோல்வியைச் சந்தித்தது. 2004 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ், பாட்டாளி மக்கள் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட ஏழு கட்சிகளுடன் வலுவான கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது திமுக. போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் வெற்றி பெற்றது.

இதனால் தமிழகத்தைச் சேர்ந்த 12 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்திய அமைச்சர்களாக பொறுப்பேற்று அதிகாரமிக்க மத்திய அரசின் தவிர்க்க முடியாத அங்கமாகினார்கள். தொடர்ந்து 2006ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி 163 இடங்களில் வெற்றி பெற்றாலும் திமுகவுக்கு 95 இடங்களே கிடைத்தன. கூட்டணி கட்சிகளின் தயவில் ஆட்சி அமைக்க நேர்ந்தது. இதுவே பின் நாட்களில் 'மைனாரிட்டி அரசு ' என்று ஒவ்வொரு முறையும் ஜெயலலிதாவால் விமர்சிக்கப்பட காரணமாக அமைந்தது.

2009 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட போரில் சிங்கள ராணுவத்தால் லட்சக்கணக்கான தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். இலங்கை போரை இந்தியா தலையிட்டு நிறுத்த வேண்டும் என மத்திய காங்கிரஸ் அரசையும், மாநில திமுக அரசையும் வலியுறுத்தி தமிழகம் உள்ளிட்ட உலகெங்கும் வாழும் தமிழர்கள் போராட்டம் நடத்தினார்கள்.

முத்துக்குமார் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டோர் தீக்குளித்து மாண்டார்கள். ஆனால் 1983 ஆம் ஆண்டு ஈழத்தமிழர் பிரச்னைக்காக தனது பதவியையே ராஜினாமா செய்த கருணாநிதி, இம்முறை இரண்டு மணி நேர உண்ணாவிரதத்தோடு நிறுத்திக் கொண்டார். இது ஈழ ஆதரவாளர்கள், தமிழ் உணர்வாளர்கள் உள்ளிட்ட தமிழ் மக்களை கொதிப்படையச் செய்தது. இனப்படுகொலைக்குத் துணை போன காங்கிரஸூடன் கூட்டணி சேர்ந்து திமுக அரசு துரோகம் இழைத்துவிட்டதாக வேதனை அடைந்தார்கள். இந்தச் சம்பவம் திமுக வரலாற்றில் அழிக்க முடியாத கரையாகிப் போனது. இதன் விளைவாகவும், 2ஜி அழைக்கற்றை ஊழல், தொடர் மின்வெட்டு, நில அபகரிப்பு போன்ற குற்றச்சாட்டுகள், ஆளும் 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக படுதோல்வியைச் சந்தித்தது. இந்த முறை திமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கூட கிடைக்காமல் போனது.

ஜெயலலிதா

தொடர்ந்து 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலிலும் திமுகவால் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை. 2016 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட திமுக, தொடர்ந்து இரண்டாவது முறையாக தோல்வியை சந்தித்தது. ஆட்சியை கைப்பற்ற முடியாமல் போனாலும் வலுவான எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றது. 2018 ஆம் ஆண்டு திமுக தலைவர் கருணாநிதி காலமானார். திமுக தலைவர் பதவியை ஸ்டாலின் ஏற்றார். தமிழக அரசியலில் இருபெரும் ஆளுமைகளான கருணாநிதி, ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் 38 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் தனது வலிமையை தக்க வைத்தது திமுக. திமுகவின் ஆட்சிக் காலத்தில் தமிழ்நாடு பெயர் மாற்றம், பெண்களுக்கு சொத்துரிமை, அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் உரிமை, பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டு உரிமை, தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து என ஏராளமான சாதனைகளை நிகழ்த்தியுள்ளது.

ஸ்டாலின் | அண்ணா அறிவாலயம் | திமுக

தற்போது 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில் முதல்வர் வேட்பாளராக போட்டியிட்ட மு.க.ஸ்டாலின் வெற்றி பெற்று முதல்வராகப் பதவியேற்றார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist