காவிரி விவகாரம்: அனைத்து கட்சித் தலைவர்கள், அதிமுக நிலைப்பாடு என்ன?
தமிழகத்துக்கு காவிரி நீரைப் பெற துணை நிற்பதாக பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
சென்னை: தமிழகத்துக்கு காவிரி நீரைப் பெற துணை நிற்பதாக பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் நிர்வாகிகள் தெரிவித்தனர். காவிரி விவகாரம் தொடர்பாக நேற்று நடைபெற்ற சட்டப்பேரவை அனைத்து கட்சித் தலைவர்கள் கூட்டத்துக்குப்பின் பங்கேற்ற கட்சிகளின் தலைவர்கள் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஓ.எஸ்.மணியன், எஸ்.பி. வேலுமணி (அதிமுக): மத்திய அரசு இடுபொருள் மானியத்தை ரூ.17 ஆயிரமாக உயர்த்திய போதும், தமிழக அரசு ரூ.13,500 மட்டுமே வழங்கியது. திமுக ஆட்சியில் குறுவைக்கு பயிர்காப்பீட்டை ரத்து செய்துவிட்டனர். கூட்டுறவு கடன் விவகாரத்தில், வறட்சி ஆண்டைாக இந்த ஆண்டை அறிவித்துஎப்போது வேண்டுமானாலும், அசல் மட்டும் கட்டினால் போதும் என்ற சட்டத்திருத்தம் கொண்டுவர வேண்டும்.
What's Your Reaction?