`பிரசாந்த் கிஷோர் உள்ளூரிலேயே விலை போகாதவர்..!” - கே.என்.நேரு விமர்சனம்!
திருச்சி மத்திய மற்றும் வடக்கு மாவட்ட தி.மு.க செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தி.மு.க முதன்மை செயலாளரும், நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே.என்.நேரு கலந்துகொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், ``பீகாரிலும், உத்தரப் பிரதேசத்திலும் தந்தை பெரியாரின் கொள்கைகளை பலர் பேசிக் கொண்டிருக்கக்கூடிய நிலையில், ஆர்.எஸ்.எஸ்-ஸிடம் பணத்தை வாங்கிக் கொண்டு தந்தை பெரியார் குறித்து சீமான் தரக்குறைவாகப் பேசுகிறார். தமிழ்நாட்டில் காமராஜர், அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆட்சிக்கு வர காரணம் தந்தை பெரியார் தான். தங்களுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என அ.தி.மு.க-வை பா.ஜ.க-வினர் மிரட்டி வருகிறார்கள். தி.மு.க கூட்டணி உறுதியாக உள்ளது. தி.மு.க-விற்கு எதிராக எவ்வளவு பெரிய கூட்டணி அமைத்தாலும் தி.மு.க-வை வீழ்த்த முடியாது. கலந்துகொண்டவர்கள்இன்று தனது கட்சியின் 2- ம் ஆண்டு தொடக்க விழாவில் பிரசாந்த் கிஷோருடன் நடிகர் விஜய் மேடையேறியுள்ளார். யார் யாருடன் கூட்டணி சேர்ந்தாலும் நமக்கு கவலையில்லை. ஏனென்றால், பிரசாந்த் கிஷோர் உள்ளூரிலேயே விலை போகாதவர். தனது கட்சிக்கு டெபாசிட் கூட வாங்காதவர். பீகார் தேர்தல் முடிவுகள் அதைத்தான் எடுத்துக்காட்டுகின்றன. அவர் இங்கு வந்து தொகுதி வியூகங்கள் வகுப்பதெல்லாம் எப்படி இருக்கும்?. தி.மு.க தலைவர் அதைத்தாண்டி வியூகங்களை வகுத்து வெற்றி பெறுவார்” என்றார்.

திருச்சி மத்திய மற்றும் வடக்கு மாவட்ட தி.மு.க செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தி.மு.க முதன்மை செயலாளரும், நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே.என்.நேரு கலந்துகொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், ``பீகாரிலும், உத்தரப் பிரதேசத்திலும் தந்தை பெரியாரின் கொள்கைகளை பலர் பேசிக் கொண்டிருக்கக்கூடிய நிலையில், ஆர்.எஸ்.எஸ்-ஸிடம் பணத்தை வாங்கிக் கொண்டு தந்தை பெரியார் குறித்து சீமான் தரக்குறைவாகப் பேசுகிறார். தமிழ்நாட்டில் காமராஜர், அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆட்சிக்கு வர காரணம் தந்தை பெரியார் தான். தங்களுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என அ.தி.மு.க-வை பா.ஜ.க-வினர் மிரட்டி வருகிறார்கள். தி.மு.க கூட்டணி உறுதியாக உள்ளது. தி.மு.க-விற்கு எதிராக எவ்வளவு பெரிய கூட்டணி அமைத்தாலும் தி.மு.க-வை வீழ்த்த முடியாது.
இன்று தனது கட்சியின் 2- ம் ஆண்டு தொடக்க விழாவில் பிரசாந்த் கிஷோருடன் நடிகர் விஜய் மேடையேறியுள்ளார். யார் யாருடன் கூட்டணி சேர்ந்தாலும் நமக்கு கவலையில்லை. ஏனென்றால், பிரசாந்த் கிஷோர் உள்ளூரிலேயே விலை போகாதவர். தனது கட்சிக்கு டெபாசிட் கூட வாங்காதவர். பீகார் தேர்தல் முடிவுகள் அதைத்தான் எடுத்துக்காட்டுகின்றன. அவர் இங்கு வந்து தொகுதி வியூகங்கள் வகுப்பதெல்லாம் எப்படி இருக்கும்?. தி.மு.க தலைவர் அதைத்தாண்டி வியூகங்களை வகுத்து வெற்றி பெறுவார்” என்றார்.
What's Your Reaction?






