Annamalai: "நீங்களே பொய் சொல்லலாமா?" - மும்மொழி கொள்கை விவகாரத்தில் விஜய்க்கு அண்ணாமலை கேள்வி

தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் இரண்டாவது ஆண்டு தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இதில் கட்சியின் நிறுவனர் விஜய், ஆதவ் அர்ஜுனா மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர். தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரும் கலந்துகொண்டார்.இந்த விழாவில் விஜய் தமிழக அரசியலில் நிலவும் பல விஷயங்களைப் பற்றிப் பேசியுள்ளார். விஜய்க்குப் பதிலளிக்கும் விதமாக அவர் (விஜய்) சொல்வது ஒன்றும், செய்வதொன்றுமாக இருக்கிறது என விமர்சித்துள்ளார், பா.ஜ.க தலைவர் அண்ணாமலை.விழா மேடையில் பேசிய விஜய், மும்மொழிக் கொள்கையைச் செயல்படுத்தவில்லை என்றால் கல்விக்கான நிதியைத் தரமாட்டோம் என மத்திய அரசு கூறுவது எல்.கே.ஜி, யு.கே.ஜி குழந்தைகள் சண்டைபோட்டுக்கொள்வது போல இருப்பதாகவும், மத்திய, மாநில அரசுகள் பேசிவைத்துக்கொண்டு இணையத்தில் ஹேஷ்டேக் போட்டு விளையாடுவதாகவும் பேசினார். அண்ணாமலைAnnamalai செய்தியாளர் சந்திப்புஇதற்குப் பதிலளிக்கும் விதமாகச் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அண்ணாமலை, "விஜய் மத்திய அரசு, மாநில அரசு இரண்டையும் குறை சொல்லியிருக்கிறார். வாட் ப்ரோ, ஏன் ப்ரோ எல்.கே.ஜி பசங்க மாதிரி சண்டை போட்டுக்கிறீங்க எனக் கேட்கிறார். நான் விஜய்யிடம் சொல்ல விரும்புகிறேன், Practice what you preach bro (நீங்கள் பிரசாரம் செய்வதைக் கடைப்பிடியுங்கள்), ஏன் பொய் சொல்கிறீர்கள்? உங்கள் குழந்தைக்கு மூன்று மொழி, நீங்கள் நடத்துகிற விஜய் வித்யாஷ்ரம் பள்ளியில் மூன்று மொழி. ஆனால், தமிழக வெற்றிக் கழகத்தினுடைய தொண்டர்களின் குழந்தைகளுக்கு இரண்டு மொழியா? என்ன இது? நீங்கள் என்ன சொல்கிறீர்களோ அதைக் கடைப்பிடிக்க வேண்டும் என விஜய்க்குப் பாஜக சார்பில் வலியுறுத்துகிறேன். எங்கேயும் யாரும் எந்த மொழியையும் திணிக்கவில்லை. நீங்களே மேடையில் பொய் சொல்லலாமா?" எனப் பேசியுள்ளார் அண்ணாமலை.TVK : `ஒன்றிய அரசுடன் ஒரே நேர்கோட்டில் தமிழக ஆட்சியாளர்கள்..!" - சாதிவாரி கணக்கெடுப்பு பற்றி விஜய்வணக்கம் வாசகர்களே விகடனின் லேட்டஸ்ட் செய்தி அப்டேட்கள், எக்ஸ்க்ளூசிவ் வீடியோக்கள், சுட சுட சுவாரஸ்யமான கட்டுரைகள் என உங்களை எப்போதும் ட்ரெண்டியாக வைத்திருக்க விகடன் வாட்ஸ்அப் சேனலில் இணைந்திருங்கள்.Click here: https://bit.ly/VikatanWAChannel

Feb 27, 2025 - 12:40
 0  14
Annamalai: "நீங்களே பொய் சொல்லலாமா?" - மும்மொழி கொள்கை விவகாரத்தில் விஜய்க்கு அண்ணாமலை கேள்வி

தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் இரண்டாவது ஆண்டு தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இதில் கட்சியின் நிறுவனர் விஜய், ஆதவ் அர்ஜுனா மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர். தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரும் கலந்துகொண்டார்.

இந்த விழாவில் விஜய் தமிழக அரசியலில் நிலவும் பல விஷயங்களைப் பற்றிப் பேசியுள்ளார். விஜய்க்குப் பதிலளிக்கும் விதமாக அவர் (விஜய்) சொல்வது ஒன்றும், செய்வதொன்றுமாக இருக்கிறது என விமர்சித்துள்ளார், பா.ஜ.க தலைவர் அண்ணாமலை.

விழா மேடையில் பேசிய விஜய், மும்மொழிக் கொள்கையைச் செயல்படுத்தவில்லை என்றால் கல்விக்கான நிதியைத் தரமாட்டோம் என மத்திய அரசு கூறுவது எல்.கே.ஜி, யு.கே.ஜி குழந்தைகள் சண்டைபோட்டுக்கொள்வது போல இருப்பதாகவும், மத்திய, மாநில அரசுகள் பேசிவைத்துக்கொண்டு இணையத்தில் ஹேஷ்டேக் போட்டு விளையாடுவதாகவும் பேசினார்.

அண்ணாமலை

Annamalai செய்தியாளர் சந்திப்பு

இதற்குப் பதிலளிக்கும் விதமாகச் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அண்ணாமலை, "விஜய் மத்திய அரசு, மாநில அரசு இரண்டையும் குறை சொல்லியிருக்கிறார். வாட் ப்ரோ, ஏன் ப்ரோ எல்.கே.ஜி பசங்க மாதிரி சண்டை போட்டுக்கிறீங்க எனக் கேட்கிறார்.

நான் விஜய்யிடம் சொல்ல விரும்புகிறேன், Practice what you preach bro (நீங்கள் பிரசாரம் செய்வதைக் கடைப்பிடியுங்கள்), ஏன் பொய் சொல்கிறீர்கள்? உங்கள் குழந்தைக்கு மூன்று மொழி, நீங்கள் நடத்துகிற விஜய் வித்யாஷ்ரம் பள்ளியில் மூன்று மொழி. ஆனால், தமிழக வெற்றிக் கழகத்தினுடைய தொண்டர்களின் குழந்தைகளுக்கு இரண்டு மொழியா? என்ன இது?

நீங்கள் என்ன சொல்கிறீர்களோ அதைக் கடைப்பிடிக்க வேண்டும் என விஜய்க்குப் பாஜக சார்பில் வலியுறுத்துகிறேன். எங்கேயும் யாரும் எந்த மொழியையும் திணிக்கவில்லை. நீங்களே மேடையில் பொய் சொல்லலாமா?" எனப் பேசியுள்ளார் அண்ணாமலை.

வணக்கம் வாசகர்களே விகடனின் லேட்டஸ்ட் செய்தி அப்டேட்கள், எக்ஸ்க்ளூசிவ் வீடியோக்கள், சுட சுட சுவாரஸ்யமான கட்டுரைகள் என உங்களை எப்போதும் ட்ரெண்டியாக வைத்திருக்க விகடன் வாட்ஸ்அப் சேனலில் இணைந்திருங்கள்.

Click here: https://bit.ly/VikatanWAChannel

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist