பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்காக இந்தியா ரூ.470 கோடி செலவழிப்பு

33-வது ஒலிம்பிக் திருவிழா வரும் 26-ம் தேதி பிரான்ஸ் தலைநகரான பாரிஸில் கோலாகலமாக தொடங்குகிறது. உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான இதில் இந்தியாவில் இருந்து 118 வீரர், வீராங்கனைகள் 16வகையான போட்டிகளில் பங்கேற்கின்றனர்.

Jul 17, 2024 - 11:02
 0  3
பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்காக இந்தியா ரூ.470 கோடி செலவழிப்பு

புதுடெல்லி: 33-வது ஒலிம்பிக் திருவிழா வரும் 26-ம் தேதி பிரான்ஸ் தலைநகரான பாரிஸில் கோலாகலமாக தொடங்குகிறது. உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான இதில் இந்தியாவில் இருந்து 118 வீரர், வீராங்கனைகள் 16வகையான போட்டிகளில் பங்கேற்கின்றனர். இந்நிலையில் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்காக இந்திய வீரர், வீராங்கனைகளின் பயிற்சிக்கு மட்டும் ரூ.470 கோடி செலவழிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இந்திய விளையாட்டு ஆணையத்தின் மிஷன் ஒலிம்பிக் செல்லின் அதிகாரப்பூர்வ தரவுகளின்படி இந்த தகவலை பிடிஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக தடகளத்துக்காக மட்டும் மத்திய அரசு ரூ.96.08 கோடி செலவிட்டுள்ளது. டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தடகளத்துக்கு ஒலிம்பிக் மேடை இலக்கு திட்டத்தின் கீழ் ரூ.5.38 கோடி மட்டுமே வழங்கப்பட்டிருந்தது. இம்முறை தடகளத்தில் ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ராவின் தலைமையில் 28 பேர் பங்கேற்கின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist