பயணிக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதால் சென்னையில் அவசரமாக தரையிறங்கிய மலேசிய விமானம்
சவூதி அரேபியா ஜெட்டா நகரில் இருந்து மலேசியா தலைநகர் கோலாலம்பூருக்கு 290 பயணிகளுடன் மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று முன்தினம் இரவு சென்று கொண்டிருந்தது.

சென்னை: சவூதி அரேபியா ஜெட்டா நகரில் இருந்து மலேசியா தலைநகர் கோலாலம்பூருக்கு 290 பயணிகளுடன் மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று முன்தினம் இரவு சென்று கொண்டிருந்தது. சென்னை வான் வெளியை கடந்து நடுவானில் பறந்து கொண்டு இருந்தபோது, விமானத்தில் இருந்த பெண் பயணி ஒருவருக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது.
அந்த பயணிக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க முடிவு செய்த விமானி, சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிக்கு தகவல் தெரிவித்தார். கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் விமானத்தை சென்னையில் தரையிறங்க அனுமதி அளித்தனர். இதையடுத்து, நேற்று அதிகாலை 4.45 மணிக்கு சென்னையில் விமானம் தரையிறங்கியது.
What's Your Reaction?







