டி.ஆர்.பாலுவிடம் 2 மணி நேரம் விசாரணை: அண்ணாமலை தரப்பு வழக்கறிஞர் சரமாரி கேள்வி

‘டிஎம்கே பைல்ஸ்’ என்ற பெயரில் தன் மீது கூறப்பட்ட புகார் தொடர்பாக பாஜக முன்​னாள் மாநிலத் தலை​வர் அண்​ணா​மலைக்கு எதிராக திமுக பொருளாள​ரும், எம்​.பி.​யு​மான டி.ஆர்​.​பாலு சைதாப்​பேட்டை குற்​ற​வியல் நீதி​மன்​றத்​தில் அவதூறு வழக்கு தொடர்ந்​திருந்​தார்.

Oct 14, 2025 - 10:42
 0  6
டி.ஆர்.பாலுவிடம் 2 மணி நேரம் விசாரணை: அண்ணாமலை தரப்பு வழக்கறிஞர் சரமாரி கேள்வி

சென்னை: அவதூறு வழக்​கில் திமுக எம்பி டி.ஆர்​.​பாலு​விடம் அண்​ணா​மலை தரப்​பில் 2 மணி நேரத்​துக்​கும் மேலாக குறுக்கு விசா​ரணை நடந்தது. ‘டிஎம்கே பைல்ஸ்’ என்ற பெயரில் தன் மீது கூறப்பட்ட புகார் தொடர்பாக பாஜக முன்​னாள் மாநிலத் தலை​வர் அண்​ணா​மலைக்கு எதிராக திமுக பொருளாள​ரும், எம்​.பி.​யு​மான டி.ஆர்​.​பாலு சைதாப்​பேட்டை குற்​ற​வியல் நீதி​மன்​றத்​தில் அவதூறு வழக்கு தொடர்ந்​திருந்​தார்.

இந்த வழக்கு சைதாப்​பேட்டை 17-வது குற்​ற​வியல் நடு​வர் செந்​தில்​கு​மார் முன்​பாக நேற்று மீண்​டும் விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது டி.ஆர்​.​பாலு​வும், அண்​ணா​மலை​யும் ஆஜராகி​யிருந்​தனர். மனு​தா​ர​ரான டி.ஆர்​.​பாலு​விடம் அண்​ணா​மலை தரப்​பில் மூத்த வழக்​கறிஞர் ஆர்​.சி.​பால்​க​னக​ராஜ் குறுக்கு விசா​ரணை நடத்​தி​னார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist