தமிழகத்தில் அக்.1 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் ஒருசில இடங்களில் அக்டோபர் 1-ம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை: தமிழகத்தில் ஒருசில இடங்களில் அக்டோபர் 1-ம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசை காற்றில் வேக மாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களிலும், அதைத் தொடர்ந்து அக்டோபர் 1-ம் தேதி வரை 4 நாட்களுக்கு ஒருசில இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.
What's Your Reaction?