பம்மல் அம்மா உணவகத்தில் சீலிங் விழுந்து பெண் காயம் - பராமரிப்பு குறைபாடு காரணமா?

தாம்பரம் மாநகராட்சி சார்பில்  பம்மலில் செயல்பட்டு வரும் அம்மா உணவகத்தில் பால் சீலிங் இன்று காலை திடீரென கீழே விழுந்ததால் அங்கு பணி புரிந்த பெண் படுகாயம் அடைந்தார். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Nov 27, 2024 - 16:22
 0  2
பம்மல் அம்மா உணவகத்தில் சீலிங் விழுந்து பெண் காயம் - பராமரிப்பு குறைபாடு காரணமா?

பம்மல்: தாம்பரம் மாநகராட்சி சார்பில் பம்மலில் செயல்பட்டு வரும் அம்மா உணவகத்தில் பால் சீலிங் இன்று காலை திடீரென கீழே விழுந்ததால் அங்கு பணி புரிந்தபெண் படுகாயம் அடைந்தார். இந்தச் சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தாம்பரம் மாநகராட்சி சார்பில் கீழ்கட்டளை, பல்லாவரம், அனகாபுத்தூர், பம்மல், தாம்பரம், சேலையூர், செம்பாக்கம் உள்ளிட்ட 7 இடங்களில் அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இன்று காலை பாம்மலில் செயல்பட்டு வரும் அம்மா உணவகத்தில் ஊழியர்கள் சுத்தம் செய்து உணவுகளை தயார் செய்து கொண்டிருந்தனர். அப்பொழுது அம்மா உணவகத்தில் மேல் குறை பால் சீலிங் திடீரென பயங்கர சத்தத்துடன் கீழே விழுந்தது. இதில் அங்கு துப்புரவு பணியை மேற்கொண்டு இருந்த உமா (46) படுகாயம் அடைந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist