குமரியில் 1,144 ஹெக்டேரில் அணுக் கனிம சுரங்கம் அமைக்க திட்டம் - தவாக எதிர்ப்பு
கன்னியாகுமரியில் 1,144 ஹெக்டேர் நிலத்தில் அணுக் கனிம சுரங்கம் அமைக்கும் மத்திய அரசின் திட்டத்தை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை: கன்னியாகுமரியில் 1,144 ஹெக்டேர் நிலத்தில் அணுக் கனிம சுரங்கம் அமைக்கும் மத்திய அரசின் திட்டத்தை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், “காலநிலை மாற்றத்தின் தாக்கங்களால் புயல், வெள்ளம், வறட்சி, பெருமழை, காட்டுத்தீ உள்ளிட்ட பேரிடர் பாதிப்புகளில் இருந்து உயிர்களையும், உடைமைகளையும், வாழிடங்களையும், வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க, உலக நாடுகள் என்ன செய்வதறியாமல் திணறி வருகின்றன. காட்டுத் தீ, பெரும் புயல்கள், அதிதீவிர மழை, அதீத வெப்பம், பனிப்பாறை உருகுவது, கடல் மட்டம் உயர்வது, கொள்ளை நோய்கள் என மனித சமூகம் எதிர்கொள்ளும் ஒவ்வொரு இயற்கை சீற்றத்திற்கும் மனித செயல்பாடுகளே அடிப்படைக் காரணமாக அமைந்துள்ளது என்பது வரலாறு.
What's Your Reaction?