பட்டியலின மக்களுக்கான நிலத்தில் தனியார் நிறுவன கட்டுமானங்களுக்கு தடை கோரி வழக்கு
பட்டியலின மக்கள் தொழில் தொடங்குவதற்காக ஒதுக்கப்பட்ட நிலத்தில் தனியார் நிறுவனங்கள் கட்டுமானங்கள் மேற்கொள்ள தடை விதிக்கக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை: பட்டியலின மக்கள் தொழில் தொடங்குவதற்காக ஒதுக்கப்பட்ட நிலத்தில் தனியார் நிறுவனங்கள் கட்டுமானங்கள் மேற்கொள்ள தடை விதிக்கக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில், டாக்டர் அம்பேத்கர் கல்வி கூட்டமைப்பு நிர்வாக இயக்குனரும், தேசிய பட்டியல் மற்றும் பழங்குடியின கவுன்சில் தேசிய அமைப்பாளருமான கவுதம சித்தார்த்தன் தாக்கல் செய்த மனுவில், “ஈரோடு மாவட்டம் பெருந்துறை தாலுகாவில் உள்ள இங்கூர் தொழில்பூங்காவில் பட்டியலின மக்கள் பின்னலாடை தொழிற்சாலைகள் அமைப்பதற்காக, தாட்கோ எனும் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி கழகம், 150 ஏக்கர் நிலத்தை, தமிழ்நாடு தொழில் உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழகத்திடம் இருந்து 99 ஆண்டு குத்தகைக்கு வாங்கியது.
What's Your Reaction?