Wayanad: படை திரட்டிய பிரியங்கா, கல்பெட்டாவில் கட்சியினரின் கலாச கொட்டு! ஓய்ந்தது சூறாவளி பிரசாரம்
வயநாடு தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. நாளை மறுநாள் ( நவம்பர்- 13) நடைபெற இருக்கும் இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் பிரியங்கா காந்தி, பா.ஜ.க தரப்பில் நவ்யா ஹரிதாஸ், இடது ஜனநாயக முன்னணி சார்பில் சத்யன் மொகேரி உள்ளிட்ட பலர் வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர். இறுதி கட்ட பிரசாரம் கடந்த சில நாட்களாக தீவிர வாக்கு சேகரிப்பில் அரசியல் கட்சியினர் ஈடுபட்டு வந்தார். வயநாடு இடைத்தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவு பெறும் என்பதால், அனைத்து வேட்பாளர்களும் இறுதிகட்ட வாக்கு சேகரிப்பில் அதிதீவிரம் காட்டினர். சகோதரர் ராகுல் காந்தியுடன் இணைந்து பிரியங்கா காந்தி பிரமாண்ட ரோட் ஷோக்களில் பங்கேற்றார். சுல்தான் பத்தேரி மற்றும் திருவம்பாடி ஆகிய இரண்டு இடங்களில் நடைபெற்ற ரோட் ஷோக்களில் பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் படையாக திரண்டு சாலையில் ஆர்ப்பரித்தனர். தொண்டர்கள் வெள்ளத்தில் வலம் வந்த பிரியங்கா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகிய இருவரும் நெகிழ்ச்சி உரையாற்றி பிரசாரத்தை நிறைவு செய்தனர். அதேபோல் இடது முன்னணி மற்றும் பா.ஜ.க வேட்பாளரும் வயநாட்டின் பல நகரங்களிலும் இறுதி கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.இறுதி கட்ட பிரசாரம் கேரளாவைப் பொறுத்தவரை தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளின் இறுதி நேரத்தில் கலாச கொட்டு எனப்படும் மேள தாளங்கள் முழங்க ஆரவாரமான ஊர்வலங்கள் அந்தந்த கட்சிகள் சார்பில் நடத்தப்படும். இன்றைய தினம் கல்பெட்டா நகரில் நடைபெற்ற கலாச கொட்டு நிகழ்ச்சியில் அந்தந்த கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மேளதாளத்துடன் நடனமாடி பிரசாரத்தை நிறைவு செய்தனர் நவம்பர் 13 - ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், நவம்பர் 23 -ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தி முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
வயநாடு தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. நாளை மறுநாள் ( நவம்பர்- 13) நடைபெற இருக்கும் இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் பிரியங்கா காந்தி, பா.ஜ.க தரப்பில் நவ்யா ஹரிதாஸ், இடது ஜனநாயக முன்னணி சார்பில் சத்யன் மொகேரி உள்ளிட்ட பலர் வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர்.
கடந்த சில நாட்களாக தீவிர வாக்கு சேகரிப்பில் அரசியல் கட்சியினர் ஈடுபட்டு வந்தார்.
வயநாடு இடைத்தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவு பெறும் என்பதால், அனைத்து வேட்பாளர்களும் இறுதிகட்ட வாக்கு சேகரிப்பில் அதிதீவிரம் காட்டினர்.
சகோதரர் ராகுல் காந்தியுடன் இணைந்து பிரியங்கா காந்தி பிரமாண்ட ரோட் ஷோக்களில் பங்கேற்றார். சுல்தான் பத்தேரி மற்றும் திருவம்பாடி ஆகிய இரண்டு இடங்களில் நடைபெற்ற ரோட் ஷோக்களில் பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் படையாக திரண்டு சாலையில் ஆர்ப்பரித்தனர்.
தொண்டர்கள் வெள்ளத்தில் வலம் வந்த பிரியங்கா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகிய இருவரும் நெகிழ்ச்சி உரையாற்றி பிரசாரத்தை நிறைவு செய்தனர். அதேபோல் இடது முன்னணி மற்றும் பா.ஜ.க வேட்பாளரும் வயநாட்டின் பல நகரங்களிலும் இறுதி கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
கேரளாவைப் பொறுத்தவரை தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளின் இறுதி நேரத்தில் கலாச கொட்டு எனப்படும் மேள தாளங்கள் முழங்க ஆரவாரமான ஊர்வலங்கள் அந்தந்த கட்சிகள் சார்பில் நடத்தப்படும். இன்றைய தினம் கல்பெட்டா நகரில் நடைபெற்ற கலாச கொட்டு நிகழ்ச்சியில் அந்தந்த கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மேளதாளத்துடன் நடனமாடி பிரசாரத்தை நிறைவு செய்தனர்
நவம்பர் 13 - ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், நவம்பர் 23 -ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தி முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
What's Your Reaction?