தொழில் வளர்ச்சியில் தமிழகம் சாதனை: நிதி ஆயோக் பாராட்டை சுட்டிக்காட்டி தமிழக அரசு பெருமிதம்
தொழிலாளர்களின் நலனில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு முழு அக்கறை செலுத்தி வருவதால், தொழில் வளர்ச்சியில் தேசிய அளவில் தமிழகம் சாதனை படைத்து வருவதை நிதி ஆயோக் உள்ளிட்டவை பாராட்டியுள்ளதாக அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது.
சென்னை: தொழிலாளர்களின் நலனில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு முழு அக்கறை செலுத்தி வருவதால், தொழில் வளர்ச்சியில் தேசிய அளவில் தமிழகம் சாதனை படைத்து வருவதை நிதி ஆயோக் உள்ளிட்டவை பாராட்டியுள்ளதாக அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்றது முதல், கடந்த 3ஆண்டுகளில் பல்வேறு புதிய திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. 20 அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியங்களில் பதிவு பெற்ற 16லட்சத்து 499 உறுப்பினர்கள் புதிதாகபதிவு செய்யப்பட்டுள்ளனர். மொத்தம் 18,46,945 தொழிலாளர்களுக்கு ரூ.1,551 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
What's Your Reaction?