எண்ணூர் உர ஆலை வாயு கசிவு வழக்கு: தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் முக்கிய தீர்ப்பு
சென்னை எண்ணூரில் அம்மோனிய வாயு கசிந்து பாதிப்பு ஏற்பட்டது தொடர்பான வழக்கில் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், மத்திய தொழிலக பாதுகாப்புத் துறை, இந்திய கடல்சார் வாரியம் ஆகியவற்றின் தடையில்லா சான்று பெற்ற பிறகே உர ஆலையைத் திறக்க வேண்டும் என்று தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் இன்று தீர்ப்பளித்தது.
சென்னை: சென்னை எண்ணூரில் அமோனியா வாயு கசிந்து பாதிப்பு ஏற்பட்டது தொடர்பான வழக்கில் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், மத்திய தொழிலக பாதுகாப்புத் துறை, இந்திய கடல்சார் வாரியம் ஆகியவற்றின் தடையில்லா சான்று பெற்ற பிறகே உர ஆலையைத் திறக்க வேண்டும் என்று தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் இன்று (மே.21) தீர்ப்பளித்தது.
சென்னை எண்ணூர் பெரியக்குப்பம் பகுதியில் தனியார் உரத் தொழிற்சாலை அமைந்துள்ளது. கடந்த டிசம்பர் மாதம் நள்ளிரவு இந்த தொழிற்சாலைக்கு திரவ அமோனியா கொண்டு செல்லும் குழாயில் கசிவு ஏற்பட்டது. இதன் காரணமாக, இந்த தொழிற்சாலைக்கு அருகே உள்ள பெரியக்குப்பம், சின்னக்குப்பம், நேதாஜி நகர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கு வாந்தி, கண் எரிச்சல், மூச்சுத்திணறல் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டன.
What's Your Reaction?