திரை விமர்சனம்: கோழிப்பண்ணை செல்லதுரை
சிறுவயதில் பெற்றோரால் கைவிடப்பட்ட செல்லதுரைக்கும் (ஏகன்), அவனது தங்கை ஜெயசுதாவுக்கும் (சத்யா) கோழிப்பண்ணை வைத்திருக்கும் பெரியசாமி (யோகிபாபு) ஆதரவளிக்கிறார்
சிறுவயதில் பெற்றோரால் கைவிடப்பட்ட செல்லதுரைக்கும் (ஏகன்), அவனது தங்கை ஜெயசுதாவுக்கும் (சத்யா) கோழிப்பண்ணை வைத்திருக்கும் பெரியசாமி (யோகிபாபு) ஆதரவளிக்கிறார். பின் பெரியசாமியின் கோழிக் கடையில் பணியாற்றி தங்கையைக் கல்லூரியில் படிக்க வைக்கிறான்செல்லதுரை. அவரை, அருகில் பானைக்கடை வைத்திருக்கும் தாமரைச்செல்வி (பிரிகிடா சகா), காதலிக்கிறார். சூழ்நிலை காரணமாக அதை அவன் புறக்கணிக்கிறான். இந்நிலையில் தன் கல்லூரியில் அறிமுகமாகும் ஒருவருடன் தங்கைக்கு காதல் ஏற்படுகிறது. இதனால் செல்லதுரை வாழ்வில் ஏற்படும் மாற்றங்கள் என்ன? அவன் பெற்றோர் என்ன ஆனார்கள்? தாமரைச்செல்வியின் காதல் என்ன ஆனது? என்கிற கேள்விகளுக்கு பதில் அளிக்கிறது மீதிக் கதை.
எளிய மக்களின் வாழ்வியலையும் மனிதஉணர்வுகளையும் பதிவுசெய்யும் திரைப்படங்களை வழங்கி வருபவர் சீனு ராமசாமி. முந்தைய படங்களில் எளிய மனிதர்களாக முன்னணி நட்சத்திரங்களை மாற்றியவர், இதில் புதுமுகங்களை நடிக்க வைத்திருப்பது சிறப்பு.
What's Your Reaction?