வயநாடு துயரம்: திரைப்பட அறிவிப்புகளை ஒத்திவைத்த மலையாள திரையுலகம்!
வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் பலர் ஏராளமானோர் உயிரிழந்த நிலையில், மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கேரளாவை உலுக்கியுள்ள இந்த சம்பவத்தால் இன்று வெளியாக இருந்த திரைப்பட அறிவிப்புகள் மற்றும் நிகழ்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
திருவனந்தபுரம்: வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்த நிலையில், மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கேரளாவை உலுக்கியுள்ள இந்த சம்பவத்தால் இன்று வெளியாக இருந்த திரைப்பட அறிவிப்புகள் மற்றும் நிகழ்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
ஜிதின் லால் இயக்கத்தில் டோவினோ தாமஸ் நடித்துள்ள ‘அஜயந்தே ரண்டம் மோஷனம்’ (Ajayante Randam Moshanam) படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அப்டேட் செவ்வாய்கிழமை மாலை 5 மணிக்கு வெளியிடப்பட இருந்தது. ஆனால், வயநாடு துயரச் சம்பவத்தால் அப்டேட் இன்று வெளியாகாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக படக்குழு வெளியிட்டுள்ள அறிவிப்பில், “வயநாட்டில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக, பாதிக்கப்பட்டவர்களின் துக்கத்தில் பங்கெடுக்கும் வகையில் இன்று வெளியாக இருந்த படத்தின் அப்டேட் வேறொரு நாளுக்கு தள்ளிவைக்கப்படுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
What's Your Reaction?