திரை விமர்சனம்: 7/G
ரோஷன் - ஸ்மிருதி வெங்கட் தம்பதி 10 வயது மகனுடன் புது வீட்டில் குடியேறுகிறார்கள். அந்த வீட்டில் 2 ஆவிகளின் நடமாட்டம் இருப்பதைக் கண்டறிகிறார் ஸ்மிருதி.
ரோஷன் - ஸ்மிருதி வெங்கட் தம்பதி 10 வயது மகனுடன் புது வீட்டில் குடியேறுகிறார்கள். அந்த வீட்டில் 2 ஆவிகளின் நடமாட்டம் இருப்பதைக் கண்டறிகிறார் ஸ்மிருதி. ஆவிகளுக்கும் அந்த வீட்டுக்கும் என்ன தொடர்பு? அவை வெளியேற, அவற்றுடன் ஸ்மிருதி செய்துகொண்ட டீல் என்ன? அதில் அவருக்கும் ஆவிகளுக்கும் வெற்றி கிடைத்ததா என்பது கதை.
வழக்கமான பழிவாங்கும் பேய் கதையை, பாட்டி கதை சொல்லும் பாணியில் சொல்ல முயன்றிருக்கிறார், எழுதி இயக்கியிருக்கும் ஹாரூன். புதுமனைப் புகுவிழா கொண்டாட்டம், ரோஷனை அடைய விரும்பும் அவரது தோழி சினேகா குப்தா செய்யும் ‘பிளாக் மேஜிக்’, புது வீட்டில் ஸ்மிருதி எதிர்கொள்ளும் ‘ஜம்ப் ஹாரர்’கள் முதல் 30 நிமிடப் படத்தை விறுவிறுப்பாக நகர்த்திச் செல்கின்றன. ஆனால், ரோஷன் பெங்களூரு சென்றுவிட, நாயகனுக்கான வேலையை ஸ்மிருதி, சோனியா அகர்வால், சினேகா குப்தா என பெண்கள் கைவசம் ஆக்கிக் கொள்ளும் காட்சிகளின் முடிச்சுகள் யூகித்துவிடும் விதமாக அமைக்கப்பட்டிருக்கின்றன.
What's Your Reaction?