``திமுக கூட்டணி உடையாது; அதிமுக வலுவாக இருக்க வேண்டும்!” - சொல்கிறார் பாஜக ராம ஸ்ரீநிவாசன்

``மாநாட்டிலும் செயற்குழு கூட்டத்திலும் விஜய் திமுக-வை சாடியிருப்பதை எப்படி பார்க்கிறீர்கள்?"``நீட் எதிர்ப்பு, இருமொழிக் கொள்கை என பாதிக்கு பாதிக்கு தி.மு.க சொல்வதை சொல்லிவிட்டு, நான் தி.மு.க-வுக்கு எதிரி என்பதும் பெரியாரை ஏற்றுக் கொண்டு நான் ஆன்மிகவாதி என்பதும் அரசியல் அயோக்கியத்தனம். மாநாட்டிலும் செயற்குழு கூட்டத்திலும் விஜய் புதிதாக ஏதேனும் ஒரு புதுக் கருத்தை சொன்னாரா? திராவிடம் என்ற சொல்லையே ஏற்காததுதான் தமிழ்தேசியம். அப்படியிருக்கையில் இரண்டும் இருகண்கள் என்பது டாஸ்மாக் கடைக்கு மகாத்மா காந்தி பெயர் வைப்பதற்கு சமம். எனவே அவரின் அரசியலே ஏமாற்று என்கிறபோது அவர் தி.மு.க-வுக்கு எதிரி என்பதும் ஏமாற்றுதான்.”TVK விஜய்``அதிகாரப் பகிர்வையும் ஒரு கொள்கையாக விஜய் அறிவித்திருப்பது் தி.மு.க கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தும் என்கிறார்களே!” ``அரசியல் முதிர்ச்சியுள்ள தலைவரான திருமாவளவன் பலத்தையே நிரூபிக்காத விஜய்யுடன் செல்லமாட்டார். குறிப்பாக தி.மு.க கூட்டணியைவிட்டு வெளியேற மாட்டார். ஒருவேளை திருமாவளவன் விஜய்யோடு சென்றால் நஷ்டம் திருமாவளவனுக்குத்தானே தவிர தி.மு.க-வுக்கு கிடையாது. என்னை கேட்டால் தி.மு.க கூட்டணியில் எந்த விரிசலும் விழாது”திருமாவளவன்``அதிகாரப் பகிர்வையும் ஒரு கொள்கையாக விஜய் அறிவித்திருப்பது் தி.மு.க கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தும் என்கிறார்களே!” ``அரசியல் முதிர்ச்சியுள்ள தலைவரான திருமாவளவன் பலத்தையே நிரூபிக்காத விஜய்யுடன் செல்லமாட்டார். குறிப்பாக தி.மு.க கூட்டணியைவிட்டு வெளியேற மாட்டார். ஒருவேளை திருமாவளவன் விஜய்யோடு சென்றால் நஷ்டம் திருமாவளவனுக்குத்தானே தவிர தி.மு.க-வுக்கு கிடையாது. என்னை கேட்டால் தி.மு.க கூட்டணியில் எந்த விரிசலும் விழாது” எடப்பாடி பழனிசாமி``அ.தி.மு.க-வை தொடாமல் எம்.ஜி.ஆரை புகழ்ந்திருக்கிறாரே விஜய்.. அதிலொரு கூட்டணிக் கணக்கு இருப்பதாக நீங்கள் சந்தேகிக்கவில்லையா?”``அ.தி.மு.க ஆதரித்து விஜய் பேசாமல் நாமாக எதையும் சொல்லிவிட முடியாது. அப்படி கூட்டணியே அமைந்தாலும் முதலில் எடப்பாடியை முதலமைச்சராக விஜய் ஏற்பாரா... எடப்பாடியை முதலமைச்சராக்க விஜய் உழைத்தால் அவரது ரசிகர்கள் ஏற்பார்களா? எடப்பாடியை சி.எம் என விஜய் சொன்னால் விஜய் காலி.. விஜய்யை சி.எம் என சொன்னால் எடப்பாடி காலி. அதேசமயம் விஜய் அ.தி.மு.க-வை இடத்தை அபகரித்துவிடுவார் என்பதை ஏற்க முடியாது. அதற்கும் வாய்ப்பில்லை. அந்த நிலை இருந்தால் அ.தி.மு.க என்றோ சரிந்திருக்கும். அது வலுவாக இருக்கவே நாங்களும் விரும்புகிறோம்” விஜய்``அந்த மாநாட்டு கூட்டத்தை பார்த்த பிறகும், விஜய் அரசியல் தாக்கம் ஏற்படுத்தாது என்கிறீர்களா?”``1000 திரையரங்குகளில் விஜய்யின் படம் வெளியாகினால் 3 லட்சம் பேர் பார்ப்பார்கள. அப்படி முதல்நாள் 1000 ரூபாய் கொடுத்து விஜய் படம் பார்க்கும் ரசிகர்கள், நேரில் பார்க்கலாமென 2000 ரூபாய் கொடுத்து வண்டியில் ஏறிவிட்டார்கள். வந்தவர்களெல்லாம் அவருடைய ரசிகர்கள். சொல்லப்போனால் விஜய்யின் வாக்காளர்களும் அவ்வளவுதான் ஆகவே அவரால் இவருக்கு பாதிப்பு இவரால் அவருக்கு பாதிப்பு என கற்பனை செய்ய வேண்டாம்”

Nov 12, 2024 - 12:38
 0  3
``திமுக கூட்டணி உடையாது; அதிமுக வலுவாக இருக்க வேண்டும்!” - சொல்கிறார் பாஜக ராம ஸ்ரீநிவாசன்

``மாநாட்டிலும் செயற்குழு கூட்டத்திலும் விஜய் திமுக-வை சாடியிருப்பதை எப்படி பார்க்கிறீர்கள்?"

``நீட் எதிர்ப்பு, இருமொழிக் கொள்கை என பாதிக்கு பாதிக்கு தி.மு.க சொல்வதை சொல்லிவிட்டு, நான் தி.மு.க-வுக்கு எதிரி என்பதும் பெரியாரை ஏற்றுக் கொண்டு நான் ஆன்மிகவாதி என்பதும் அரசியல் அயோக்கியத்தனம். மாநாட்டிலும் செயற்குழு கூட்டத்திலும் விஜய் புதிதாக ஏதேனும் ஒரு புதுக் கருத்தை சொன்னாரா? திராவிடம் என்ற சொல்லையே ஏற்காததுதான் தமிழ்தேசியம். அப்படியிருக்கையில் இரண்டும் இருகண்கள் என்பது டாஸ்மாக் கடைக்கு மகாத்மா காந்தி பெயர் வைப்பதற்கு சமம். எனவே அவரின் அரசியலே ஏமாற்று என்கிறபோது அவர் தி.மு.க-வுக்கு எதிரி என்பதும் ஏமாற்றுதான்.”

TVK விஜய்

``அதிகாரப் பகிர்வையும் ஒரு கொள்கையாக விஜய் அறிவித்திருப்பது் தி.மு.க கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தும் என்கிறார்களே!”

``அரசியல் முதிர்ச்சியுள்ள தலைவரான திருமாவளவன் பலத்தையே நிரூபிக்காத விஜய்யுடன் செல்லமாட்டார். குறிப்பாக தி.மு.க கூட்டணியைவிட்டு வெளியேற மாட்டார். ஒருவேளை திருமாவளவன் விஜய்யோடு சென்றால் நஷ்டம் திருமாவளவனுக்குத்தானே தவிர தி.மு.க-வுக்கு கிடையாது. என்னை கேட்டால் தி.மு.க கூட்டணியில் எந்த விரிசலும் விழாது”

திருமாவளவன்

``அதிகாரப் பகிர்வையும் ஒரு கொள்கையாக விஜய் அறிவித்திருப்பது் தி.மு.க கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தும் என்கிறார்களே!”

``அரசியல் முதிர்ச்சியுள்ள தலைவரான திருமாவளவன் பலத்தையே நிரூபிக்காத விஜய்யுடன் செல்லமாட்டார். குறிப்பாக தி.மு.க கூட்டணியைவிட்டு வெளியேற மாட்டார். ஒருவேளை திருமாவளவன் விஜய்யோடு சென்றால் நஷ்டம் திருமாவளவனுக்குத்தானே தவிர தி.மு.க-வுக்கு கிடையாது. என்னை கேட்டால் தி.மு.க கூட்டணியில் எந்த விரிசலும் விழாது”

எடப்பாடி பழனிசாமி

``அ.தி.மு.க-வை தொடாமல் எம்.ஜி.ஆரை புகழ்ந்திருக்கிறாரே விஜய்.. அதிலொரு கூட்டணிக் கணக்கு இருப்பதாக நீங்கள் சந்தேகிக்கவில்லையா?”

``அ.தி.மு.க ஆதரித்து விஜய் பேசாமல் நாமாக எதையும் சொல்லிவிட முடியாது. அப்படி கூட்டணியே அமைந்தாலும் முதலில் எடப்பாடியை முதலமைச்சராக விஜய் ஏற்பாரா... எடப்பாடியை முதலமைச்சராக்க விஜய் உழைத்தால் அவரது ரசிகர்கள் ஏற்பார்களா? எடப்பாடியை சி.எம் என விஜய் சொன்னால் விஜய் காலி.. விஜய்யை சி.எம் என சொன்னால் எடப்பாடி காலி. அதேசமயம் விஜய் அ.தி.மு.க-வை இடத்தை அபகரித்துவிடுவார் என்பதை ஏற்க முடியாது. அதற்கும் வாய்ப்பில்லை. அந்த நிலை இருந்தால் அ.தி.மு.க என்றோ சரிந்திருக்கும். அது வலுவாக இருக்கவே நாங்களும் விரும்புகிறோம்”

விஜய்

``அந்த மாநாட்டு கூட்டத்தை பார்த்த பிறகும், விஜய் அரசியல் தாக்கம் ஏற்படுத்தாது என்கிறீர்களா?”

``1000 திரையரங்குகளில் விஜய்யின் படம் வெளியாகினால் 3 லட்சம் பேர் பார்ப்பார்கள. அப்படி முதல்நாள் 1000 ரூபாய் கொடுத்து விஜய் படம் பார்க்கும் ரசிகர்கள், நேரில் பார்க்கலாமென 2000 ரூபாய் கொடுத்து வண்டியில் ஏறிவிட்டார்கள். வந்தவர்களெல்லாம் அவருடைய ரசிகர்கள். சொல்லப்போனால் விஜய்யின் வாக்காளர்களும் அவ்வளவுதான் ஆகவே அவரால் இவருக்கு பாதிப்பு இவரால் அவருக்கு பாதிப்பு என கற்பனை செய்ய வேண்டாம்”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist