Ironman 70.3: அண்ணாமலை கலந்துகொண்ட 'அயர்ன்மேன்' போட்டி; பிரதமர் மோடி புகழாரம்!

ஒவ்வொரு ஆண்டும் உலக ட்ரையத்லான் கார்ப்பரேஷன் (World Triathlon Corporation - WTC) நடத்தும் இந்த ஆண்டுக்கான 'அயர்ன் மேன் 70.3' நிகழ்ச்சி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கோவாவில் நடைபெற்றது. மனிதர்களின் உடல், மன உறுதியை மேம்படுத்தும் நோக்கில் நடத்தப்படும் இந்தப் போட்டியில் உலக நாடுகளிலிருந்து பலரும் கலந்துகொண்டனர். நீச்சல், சைக்கிள், ஓட்டம் என மொத்தம் 70.3 மைல்கள் (113 கி.மீ) கடக்க வேண்டும். இந்த நிகழ்வில் பெங்களூரு தெற்குத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் தேஜஸ்வி சூர்யா, தமிழக பா.ஜ.க முன்னாள் தலைவர் அண்ணாமலை ஆகியோர் கலந்துகொண்டனர்.Ironman 70.3: அண்ணாமலைஇது தொடர்பாக பிரதமர் மோடி தன் எக்ஸ் பக்கத்தில், ``கோவாவில் இன்று நடைபெற்ற அயர்ன்மேன் 70.3 நிகழ்வுகளில் நமது இளைஞர்களின் பங்களிப்பு அதிகரித்து வருவதைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். இதுபோன்ற நிகழ்வுகள் Fit India இயக்கத்திற்கு பெரும் பங்களிக்கின்றன. கலந்து கொண்ட அனைவருக்கும் வாழ்த்துகள். நமது கட்சியின் இளம் சகாக்களான அண்ணாமலையும் தேஜஸ்வி சூர்யாவும் அயர்ன்மேன் டிரையத்லானை வெற்றிகரமாக நிறைவு செய்தவர்களில் இடம்பெற்றிருந்தது மகிழ்ச்சி அளிக்கிறது." எனப் பாராட்டியிருக்கிறார்.இது தொடர்பாக தமிழக பா.ஜ.க முன்னாள் தலைவர் அண்ணாமலை தன் எக்ஸ் பக்கத்தில், ``இந்த வருட தொடக்கத்தில், கோவாவில் நடைபெறும் அயர்ன்மேன் 70.3 போட்டிக்குத் தயாராக வேண்டும்.அப்போது, ​​எனது உடற்பயிற்சியைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல வேண்டும், என்னைக் கவனித்துக்கொண்டு பயிற்சி செய்ய வேண்டும், ஒரு தடகள வீரரின் மனநிலையைப் பின்பற்ற வேண்டும் எனக் உறுதி ஏற்றேன்.திறந்த கடலில் 1.9 கிமீ நீந்தி, கோவாவின் மலைப்பாங்கான நிலப்பரப்புகளில் 90 கிமீ சைக்கிள் ஓட்டி, இறுதிக் எல்லையான 21 கிமீ ஓடினேன். இந்த சவால் எனது சகிப்புத்தன்மையை மட்டுமல்ல, எனது மனதின் வலிமையையும் சோதித்தது.Ironman 70.3: அண்ணாமலைமுன்னேற விரும்புவோருக்குகான சவால் உண்மையானது. ஆனால் அதற்கான வெகுமதி உள்ளுக்குள் ஏற்படும் மாற்றத்தில்தான் கிடைக்கும். ஃபிட் இந்தியா இயக்கத்தின் மூலம் மில்லியன் கணக்கானவர்களை ஊக்கப்படுத்தியதற்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.இந்தப் போட்டிக்கு தயாராகுவதற்கான வழிகாட்டுதல் மற்றும் ஆதரவுக்கு என் அன்பு சகோதரர் தேஜஸ்வி சூர்யாவுக்கும் நன்றி. இந்த முறையும் அயர்ன் மேன் சவாலை முடித்ததற்காக வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.'விரைவில் மாற்றம், சற்று பொறுத்திருங்கள்' - அண்ணாமலை சஸ்பென்ஸ்

Nov 10, 2025 - 17:04
 0  3
Ironman 70.3: அண்ணாமலை கலந்துகொண்ட 'அயர்ன்மேன்' போட்டி; பிரதமர் மோடி புகழாரம்!

ஒவ்வொரு ஆண்டும் உலக ட்ரையத்லான் கார்ப்பரேஷன் (World Triathlon Corporation - WTC) நடத்தும் இந்த ஆண்டுக்கான 'அயர்ன் மேன் 70.3' நிகழ்ச்சி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கோவாவில் நடைபெற்றது.

மனிதர்களின் உடல், மன உறுதியை மேம்படுத்தும் நோக்கில் நடத்தப்படும் இந்தப் போட்டியில் உலக நாடுகளிலிருந்து பலரும் கலந்துகொண்டனர். நீச்சல், சைக்கிள், ஓட்டம் என மொத்தம் 70.3 மைல்கள் (113 கி.மீ) கடக்க வேண்டும்.

இந்த நிகழ்வில் பெங்களூரு தெற்குத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் தேஜஸ்வி சூர்யா, தமிழக பா.ஜ.க முன்னாள் தலைவர் அண்ணாமலை ஆகியோர் கலந்துகொண்டனர்.

Ironman 70.3: அண்ணாமலை
Ironman 70.3: அண்ணாமலை

இது தொடர்பாக பிரதமர் மோடி தன் எக்ஸ் பக்கத்தில், ``கோவாவில் இன்று நடைபெற்ற அயர்ன்மேன் 70.3 நிகழ்வுகளில் நமது இளைஞர்களின் பங்களிப்பு அதிகரித்து வருவதைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன்.

இதுபோன்ற நிகழ்வுகள் Fit India இயக்கத்திற்கு பெரும் பங்களிக்கின்றன. கலந்து கொண்ட அனைவருக்கும் வாழ்த்துகள்.

நமது கட்சியின் இளம் சகாக்களான அண்ணாமலையும் தேஜஸ்வி சூர்யாவும் அயர்ன்மேன் டிரையத்லானை வெற்றிகரமாக நிறைவு செய்தவர்களில் இடம்பெற்றிருந்தது மகிழ்ச்சி அளிக்கிறது." எனப் பாராட்டியிருக்கிறார்.

இது தொடர்பாக தமிழக பா.ஜ.க முன்னாள் தலைவர் அண்ணாமலை தன் எக்ஸ் பக்கத்தில், ``இந்த வருட தொடக்கத்தில், கோவாவில் நடைபெறும் அயர்ன்மேன் 70.3 போட்டிக்குத் தயாராக வேண்டும்.

அப்போது, ​​எனது உடற்பயிற்சியைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல வேண்டும், என்னைக் கவனித்துக்கொண்டு பயிற்சி செய்ய வேண்டும், ஒரு தடகள வீரரின் மனநிலையைப் பின்பற்ற வேண்டும் எனக் உறுதி ஏற்றேன்.

திறந்த கடலில் 1.9 கிமீ நீந்தி, கோவாவின் மலைப்பாங்கான நிலப்பரப்புகளில் 90 கிமீ சைக்கிள் ஓட்டி, இறுதிக் எல்லையான 21 கிமீ ஓடினேன். இந்த சவால் எனது சகிப்புத்தன்மையை மட்டுமல்ல, எனது மனதின் வலிமையையும் சோதித்தது.

Ironman 70.3: அண்ணாமலை
Ironman 70.3: அண்ணாமலை

முன்னேற விரும்புவோருக்குகான சவால் உண்மையானது. ஆனால் அதற்கான வெகுமதி உள்ளுக்குள் ஏற்படும் மாற்றத்தில்தான் கிடைக்கும். ஃபிட் இந்தியா இயக்கத்தின் மூலம் மில்லியன் கணக்கானவர்களை ஊக்கப்படுத்தியதற்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்தப் போட்டிக்கு தயாராகுவதற்கான வழிகாட்டுதல் மற்றும் ஆதரவுக்கு என் அன்பு சகோதரர் தேஜஸ்வி சூர்யாவுக்கும் நன்றி. இந்த முறையும் அயர்ன் மேன் சவாலை முடித்ததற்காக வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist