தமிழகத்தில் ஐந்து நாட்களுக்கு கடுமையான வெப்ப அலை: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
தமிழகம் உட்பட தென்னிந்தியாவின் பல பகுதிகளில் கடுமையான வெப்ப அலை வீசக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி: தமிழகம் உட்பட தென்னிந்தியாவின் பல பகுதிகளில் கடுமையான வெப்ப அலை வீசக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஏப்ரல் 15 முதல் ஒடிசாவிலும், ஏப்ரல் 17 முதல் மேற்கு வங்கத்திலும் நிலவி வரும் வெப்ப அலையானது தென்னிந்தியாவிலும் பரவக்கூடும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக இந்திய வானிலை மையம் தனது அறிவிப்பில், “அடுத்த ஐந்து நாட்களுக்கு கிழக்கு இந்தியா மற்றும் தெற்கு தீபகற்ப இந்திய பகுதிகளான மேற்கு வங்கம், கர்நாடகா, ஒடிசா, தமிழகம், பிஹார், சிக்கிம், தெலங்கானா, உத்தரபிரதேசம் மற்றும் ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் கடுமையான வெப்ப அலை வீசக்கூடும்.
What's Your Reaction?