“தங்க முதலீட்டுத் திட்டம் மூலம் ஆண்டுக்கு ரூ.5.79 கோடி வட்டி கிடைக்கிறது” - அமைச்சர் சேகர்பாபு

13 கோயில்களிலிருந்து பெறப்பட்ட தங்கத்தை பாரத ஸ்டேட் வங்கியில் முதலீடு செய்யப்பட்டதன் காரணமாக ஆண்டுக்கு ரூ.5 கோடியே 79 லட்சத்து 12 ஆயிரத்து 671 ரூபாய் வட்டித் தொகையாக கிடைக்கப் பெறுகிறது, என்று அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். 

Jun 24, 2024 - 17:35
 0  0
“தங்க முதலீட்டுத் திட்டம் மூலம் ஆண்டுக்கு ரூ.5.79 கோடி வட்டி கிடைக்கிறது” - அமைச்சர் சேகர்பாபு

சென்னை: தங்க முதலீட்டு திட்டத்தில் 13 கோயில்களிலிருந்து பெறப்பட்ட 257 கோடியே 22 லட்சத்து 36 ஆயிரத்து 910 ரூபாய் மதிப்பிலான 442 கிலோ 107 கிராம் 030 மில்லிகிராம் எடை கொண்ட தங்கக் கட்டிகள் பாரத ஸ்டேட் வங்கியில் முதலீடு செய்யப்பட்டதன் காரணமாக ஆண்டுக்கு ரூ.5 கோடியே 79 லட்சத்து 12 ஆயிரத்து 671 ரூபாய் வட்டித் தொகையாக கிடைக்கப் பெறுகிறது, என்று அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.

சட்டப்பேரவையில், திங்கள்கிழமை கேள்வி நேரத்தின்போது, பேரவைத் துணைத் தலைவர் கு.பிச்சாண்டி, கோயில்களில் செலுத்தப்பட்ட தங்க காணிக்கைகளை கட்டிகளாக உருவாக்கி வங்கிகளில் எந்தெந்த கோயிலுடைய தங்கங்கள் அப்படி டெபாசிட் செய்யப்பட்டிருக்கிறது என்பதையும் தொடர்ந்து அந்த பணிகளை அறநிலையத்துறை செய்யுமா? என்று கேள்வி எழுப்பினார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist