Gaza: குண்டு மழை பொழிந்த இஸ்ரேல் - நெதன்யாகு போர் நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தது ஏன்?

காஸா பகுதியில் செவ்வாய் அன்று இஸ்ரேல் நடத்திய குண்டு வெடிப்பு தாக்குதலில் 400-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என உள்ளூர் சுகாதாரத்துறையை சேர்ந்த அதிகாரி தெரிவித்துள்ளார். இந்த குண்டு வெடிப்பு தாக்குதலால், 17 மாத போரில் கடந்த ஜனவரி முதல் நடைமுறைபடுத்தப்பட்டிருந்த போர் நிறுத்த அறிவிப்பை கைவிட்டுள்ளது இஸ்ரேல்.இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, உத்தரவின் பெயரில் நடத்தப்பட்ட தாக்குதலில் குழந்தைகளும் பெண்களும் பலியானதாக தெரிவிக்கப்படுகிறது. நெதன்யாகுபோர் நிறுத்த ஒப்பந்தத்தை மாற்ற வேண்டும் என்ற இஸ்ரேலின் கோரிக்கையை ஹமாஸ் ஏற்காததால் மீண்டும் தாக்குதல் நடத்தப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் இன்னும் தீவிரமாகும் என்றும் கூறப்படுகிறது.இஸ்ரேலின் செயல்களை ஆதரிப்பதாகவும், இதுகுறித்து தங்களது ஆலோசனை பெறப்பட்டதாகவும் அமெரிக்காவின் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது மேலும் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.கவலையளிக்கும் காஸாவின் நிலைகாஸா மக்கள் கிழக்கு காசாவை விட்டு வெளியேறி மைய பகுதிக்கு செல்லுமாறு இஸ்ரேல் இராணுவம் அறிவித்துள்ளது. விரைவில் இஸ்ரேல் புதிய தரைவழி தாக்குதலைத் தொடங்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.GAZA ஏற்கெனவே காஸாவில் உள்ள பாலஸ்தீன மக்களுக்கான உணவு, மருந்து, எரிபொருள் மற்றும் பிற பொருட்களின் வருகையை இஸ்ரேல் துண்டித்து இரண்டுவாரங்கள் கடந்துள்ளதால், பொருட்கள் தீர்ந்துவருவதாக பாலஸ்தீனியர்களுக்கு உதவும் குழுக்கள் எச்சரித்தன. இந்த நிலையில் இஸ்ரேல் எதிர்பாராத தாக்குதலை நடத்தியுள்ளது.போரினால் பல்லாயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் இறந்ததுடன், காஸா முழுவதுமே தரைமட்டமாக்கப்பட்டிள்ளது. ரமலான் மாதத்தில் மீண்டும் போர் தொடங்குவது பாலஸ்தீனியர்கள் குறித்து கவலை எழுப்பியதுடன், ஹமாஸிடம் பணயக்கைதிகளாக இருக்கும் 20க்கும் மேற்பட்ட இஸ்ரேல் மக்கள் குறித்தும் கவலைகளை எழுப்பியுள்ளது.அமெரிக்காதான் பொறுப்புஇந்த தாக்குதல் குறித்து ஹமாஸ் வெளியிட்ட அறிக்கையில், "ஆக்கிரமிப்பாளர்களுக்கு எல்லையில்லாத அரசியல் மற்றும் ராணுவ உதவி வழங்குவதனால் வாஷிங்டன்தான் இன அழிப்புக்கும் காஸாவில் நடக்கும் குழந்தைகள் மற்றும் பெண்கள் படுகொலைகளுக்கும் முழு பொறுப்பு" எனக் குறிப்பிட்டுள்ளது. GAZAபோர் நிறுத்த ஒப்பந்தத்தை ஹமாஸ் துல்லியமாக கடைபிடித்து வருவதாகவும், இஸ்ரேல் ஆக்கிரமிப்பாளர்கள் வாக்குறுதியை மீறி போரையும் ஆக்கிரமிப்பையும் தொடங்கி ஒப்பந்தத்தை மீறியுள்ளனர் என்றும் கூறியதுடன், மத்தியஸ்தர்களுடன் இணைந்து ஆக்கிரமிப்பை கட்டுப்படுத்துவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.குழந்தைகள் தினம்: காசாவிலிருந்து லெபனான் வரை... குழந்தைகளைத் துரத்தும் போர்!

Mar 19, 2025 - 17:11
 0  8
Gaza: குண்டு மழை பொழிந்த இஸ்ரேல் - நெதன்யாகு போர் நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தது ஏன்?

காஸா பகுதியில் செவ்வாய் அன்று இஸ்ரேல் நடத்திய குண்டு வெடிப்பு தாக்குதலில் 400-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என உள்ளூர் சுகாதாரத்துறையை சேர்ந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

இந்த குண்டு வெடிப்பு தாக்குதலால், 17 மாத போரில் கடந்த ஜனவரி முதல் நடைமுறைபடுத்தப்பட்டிருந்த போர் நிறுத்த அறிவிப்பை கைவிட்டுள்ளது இஸ்ரேல்.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, உத்தரவின் பெயரில் நடத்தப்பட்ட தாக்குதலில் குழந்தைகளும் பெண்களும் பலியானதாக தெரிவிக்கப்படுகிறது.

நெதன்யாகு

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மாற்ற வேண்டும் என்ற இஸ்ரேலின் கோரிக்கையை ஹமாஸ் ஏற்காததால் மீண்டும் தாக்குதல் நடத்தப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் இன்னும் தீவிரமாகும் என்றும் கூறப்படுகிறது.

இஸ்ரேலின் செயல்களை ஆதரிப்பதாகவும், இதுகுறித்து தங்களது ஆலோசனை பெறப்பட்டதாகவும் அமெரிக்காவின் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது மேலும் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.

கவலையளிக்கும் காஸாவின் நிலை

காஸா மக்கள் கிழக்கு காசாவை விட்டு வெளியேறி மைய பகுதிக்கு செல்லுமாறு இஸ்ரேல் இராணுவம் அறிவித்துள்ளது. விரைவில் இஸ்ரேல் புதிய தரைவழி தாக்குதலைத் தொடங்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

GAZA

ஏற்கெனவே காஸாவில் உள்ள பாலஸ்தீன மக்களுக்கான உணவு, மருந்து, எரிபொருள் மற்றும் பிற பொருட்களின் வருகையை இஸ்ரேல் துண்டித்து இரண்டுவாரங்கள் கடந்துள்ளதால், பொருட்கள் தீர்ந்துவருவதாக பாலஸ்தீனியர்களுக்கு உதவும் குழுக்கள் எச்சரித்தன. இந்த நிலையில் இஸ்ரேல் எதிர்பாராத தாக்குதலை நடத்தியுள்ளது.

போரினால் பல்லாயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் இறந்ததுடன், காஸா முழுவதுமே தரைமட்டமாக்கப்பட்டிள்ளது. ரமலான் மாதத்தில் மீண்டும் போர் தொடங்குவது பாலஸ்தீனியர்கள் குறித்து கவலை எழுப்பியதுடன், ஹமாஸிடம் பணயக்கைதிகளாக இருக்கும் 20க்கும் மேற்பட்ட இஸ்ரேல் மக்கள் குறித்தும் கவலைகளை எழுப்பியுள்ளது.

அமெரிக்காதான் பொறுப்பு

இந்த தாக்குதல் குறித்து ஹமாஸ் வெளியிட்ட அறிக்கையில், "ஆக்கிரமிப்பாளர்களுக்கு எல்லையில்லாத அரசியல் மற்றும் ராணுவ உதவி வழங்குவதனால் வாஷிங்டன்தான் இன அழிப்புக்கும் காஸாவில் நடக்கும் குழந்தைகள் மற்றும் பெண்கள் படுகொலைகளுக்கும் முழு பொறுப்பு" எனக் குறிப்பிட்டுள்ளது.

GAZA

போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஹமாஸ் துல்லியமாக கடைபிடித்து வருவதாகவும், இஸ்ரேல் ஆக்கிரமிப்பாளர்கள் வாக்குறுதியை மீறி போரையும் ஆக்கிரமிப்பையும் தொடங்கி ஒப்பந்தத்தை மீறியுள்ளனர் என்றும் கூறியதுடன், மத்தியஸ்தர்களுடன் இணைந்து ஆக்கிரமிப்பை கட்டுப்படுத்துவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist