செர்னோபில் அணுஉலை மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல்: உக்ரைன் அதிபர் குற்றச்சாட்டு
செர்னோபில் அணுமின்நிலையத்தில் உள்ள கைவிடப்பட்ட அணு உலையின் மீது ரஷ்யா ட்ரோன் மூலம் தாக்கியுள்ளதாக உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி குற்றம்சாட்டியுள்ளார்.

கிவ்: செர்னோபில் அணுமின்நிலையத்தில் உள்ள கைவிடப்பட்ட அணு உலையின் மீது ரஷ்யா ட்ரோன் மூலம் தாக்கியுள்ளதாக உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி குற்றம்சாட்டியுள்ளார்.
இந்தத் தாக்குதல், ஏற்கெனவே அழிக்கப்பட்ட அணுமின் நிலையத்தில் முன்பு செயலில் இருந்த நான்காவது அணு உலை மீது நேற்றிரவு நடத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்கு தீ விபத்து ஏற்பட்டது, அது அணைக்கப்பட்டு விட்டதாகவும் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
What's Your Reaction?






