``செப்டம்பர் மாதத்துக்குள் கூவம் ஆற்றில் உள்ள கட்டடக் கழிவுகள் அகற்றப்படும்...'' - அமைச்சர் நேரு

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் வடகிழக்குப் பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, ``மதுரவாயல்-துறைமுகம் டபுள் டெக்கர் பறக்கும் சாலை திட்டத்துக்கான பணிகள் தொடங்கியுள்ளன. இதற்காக இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கூவம் ஆற்றில் கட்டடக் கழிவுகளை கொட்டியுள்ளது. இந்தக் கட்டடக் கழிவுகளை செப்டம்பர் மாதத்துக்குள் அகற்றப்படும். அதேசமயம் மாம்பலம் கால்வாய், ஒட்டேரி நல்லா கல்வாய்களில் உள்ள துளைகளை அடைக்க வேண்டும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.அமைச்சர் நேருமூடப்படும் கூவம்... காத்திருக்கும் பெருமழை வெள்ளம்... சென்னையை காப்பாற்றப்போவது யார்?வியாசர்பாடி, கணேஷ்புரம் சுரங்கப்பாதை தண்ணீர் தேங்கும் பகுதியாக உள்ளது. ரயில்வே துறையின் பணிகளால் இந்தச் சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்குகிறது. விரைவில் இது சரிசெய்யப்படும்.சென்னை மாநகரில் 95 சதவிகித மழைநீர் வடிகால் பணிகள் முடிவடைந்துவிட்டன. மீதமிருக்கும் பணிகள் 15 நாள்களில் முடிவடைந்துவிடும். கொசஸ்தலை ஆற்றுப் பகுதியில் 2,500 கோடி மதிப்பீட்டில் வடிகால் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதிலும் 80 சதவிகித பணிகள் முடிவடைந்துவிட்டன. மீதமிருக்கும் பணிகள் 8 மாதங்களுக்குள் முடிவடைந்துவிடும். இதில் சென்னை மாநகர எல்லைக்குள் உள்ள பணியின் மதிப்பு ரூ.1,000 கோடி. மழைநீர் வடிகால் அமைக்கும் பணிமெட்ராஸ் வரலாறு: “கூவம் ஆற்றில் பயணம் செய்த ரோமாபுரி மன்னர்கள்”| பகுதி-1சென்னையின் மழைநீர் வடிகால் பாதைகள் 20 செ.மீ மழையை தாங்கும் வகையில்தான் உள்ளது. ஆனால், ஒரேநாளில் 40 செ.மீ மழை பொழிவதற்கும் வாய்ப்பிருக்கிறது. இதனால் தண்ணீரை வெளியேற்றுவதற்காக மோட்டார் பம்புகள் ஆட்களை வைத்து செய்யப்பட உள்ளது. கடந்த ஆண்டு மழையின்போது 7 நாள்களில் மின்சாரமும், குடிநீர் குழாய்களும் சரிசெய்யப்பட்டு பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டன. மழைநீர் வடிகால் அமைக்கும் பணி9,643 பழுதான சாலைப் பணிகள் மீண்டும் சரி செய்யப்பட்டு வருகின்றன. இதில் 597 பணிகள் செய்ய வேண்டியுள்ளது. இதிலும் 528 சாலை பணிகள் ஆகஸ்ட் மாதத்துக்குள் முடிக்கப்படும். இதற்காக டெண்டர் எடுத்த நிறுவனங்களை வேலைகளை முடிக்கும் வகையில் வலியுறுத்த இருக்கிறோம். சென்னை மாநகராட்சி போலவே தாம்பரம் மாநகராட்சி பகுதியும் மழைக்கு அதிகம் இலக்காகின்றன. அங்கு, என்ன பிரச்னையுள்ளது என்பது குறித்து தாம்பரம் மாநகராட்சியிடம் கேட்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார். கூவம் நதி வரலாறு: "நாங்கள்லாம் அப்பவே இப்படித்தான்!"

Jul 31, 2024 - 10:06
 0  7
``செப்டம்பர் மாதத்துக்குள் கூவம் ஆற்றில் உள்ள கட்டடக் கழிவுகள் அகற்றப்படும்...'' - அமைச்சர் நேரு

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் வடகிழக்குப் பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, ``மதுரவாயல்-துறைமுகம் டபுள் டெக்கர் பறக்கும் சாலை திட்டத்துக்கான பணிகள் தொடங்கியுள்ளன. இதற்காக இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கூவம் ஆற்றில் கட்டடக் கழிவுகளை கொட்டியுள்ளது. இந்தக் கட்டடக் கழிவுகளை செப்டம்பர் மாதத்துக்குள் அகற்றப்படும். அதேசமயம் மாம்பலம் கால்வாய், ஒட்டேரி நல்லா கல்வாய்களில் உள்ள துளைகளை அடைக்க வேண்டும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் நேரு

வியாசர்பாடி, கணேஷ்புரம் சுரங்கப்பாதை தண்ணீர் தேங்கும் பகுதியாக உள்ளது. ரயில்வே துறையின் பணிகளால் இந்தச் சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்குகிறது. விரைவில் இது சரிசெய்யப்படும்.

சென்னை மாநகரில் 95 சதவிகித மழைநீர் வடிகால் பணிகள் முடிவடைந்துவிட்டன. மீதமிருக்கும் பணிகள் 15 நாள்களில் முடிவடைந்துவிடும். கொசஸ்தலை ஆற்றுப் பகுதியில் 2,500 கோடி மதிப்பீட்டில் வடிகால் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதிலும் 80 சதவிகித பணிகள் முடிவடைந்துவிட்டன. மீதமிருக்கும் பணிகள் 8 மாதங்களுக்குள் முடிவடைந்துவிடும். இதில் சென்னை மாநகர எல்லைக்குள் உள்ள பணியின் மதிப்பு ரூ.1,000 கோடி.

மழைநீர் வடிகால் அமைக்கும் பணி

சென்னையின் மழைநீர் வடிகால் பாதைகள் 20 செ.மீ மழையை தாங்கும் வகையில்தான் உள்ளது. ஆனால், ஒரேநாளில் 40 செ.மீ மழை பொழிவதற்கும் வாய்ப்பிருக்கிறது. இதனால் தண்ணீரை வெளியேற்றுவதற்காக மோட்டார் பம்புகள் ஆட்களை வைத்து செய்யப்பட உள்ளது. கடந்த ஆண்டு மழையின்போது 7 நாள்களில் மின்சாரமும், குடிநீர் குழாய்களும் சரிசெய்யப்பட்டு பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டன.

மழைநீர் வடிகால் அமைக்கும் பணி

9,643 பழுதான சாலைப் பணிகள் மீண்டும் சரி செய்யப்பட்டு வருகின்றன. இதில் 597 பணிகள் செய்ய வேண்டியுள்ளது. இதிலும் 528 சாலை பணிகள் ஆகஸ்ட் மாதத்துக்குள் முடிக்கப்படும். இதற்காக டெண்டர் எடுத்த நிறுவனங்களை வேலைகளை முடிக்கும் வகையில் வலியுறுத்த இருக்கிறோம். சென்னை மாநகராட்சி போலவே தாம்பரம் மாநகராட்சி பகுதியும் மழைக்கு அதிகம் இலக்காகின்றன. அங்கு, என்ன பிரச்னையுள்ளது என்பது குறித்து தாம்பரம் மாநகராட்சியிடம் கேட்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist