அமெரிக்கா: NIH இயக்குநராக இந்திய வம்சாவளியை டிக் செய்த ட்ரம்ப் - யார் இந்த பட்டாச்சார்யா?!

அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் ட்ரம்ப், இந்திய-அமெரிக்க மருத்துவரும், பொருளாதார நிபுணருமான டாக்டர் ஜெய் பட்டாச்சார்யாவை, நாட்டின் தலைசிறந்த சுகாதார ஆராய்ச்சி மற்றும் நிதியளிப்பு நிறுவனமான தேசிய சுகாதார நிறுவனங்களின் (NIH) அடுத்த இயக்குநராக நியமித்துள்ளார். யார் இந்த பட்டாச்சார்யா ??1968 இல் கொல்கத்தாவில் பிறந்த ஜெய் பட்டாச்சார்யா , ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் மற்றும் பொருளாதாரத்தில் முனைவர் பட்டமும் பெற்றவர். தற்போது ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் சுகாதாரக் கொள்கைப் பேராசிரியராகவும், தேசிய பொருளாதார ஆராய்ச்சிக் கழகத்தில் ஆராய்ச்சி கூட்டாளராகவும் உள்ள டாக்டர் பட்டாச்சார்யா, ஸ்டான்ஃபோர்டின் மக்கள்தொகை, ஆரோக்கியம் மற்றும் முதுமைக்கான பொருளாதார மையத்தை இயக்கி வருகிறார். இவரின் ஆராய்ச்சிகள் பாதிக்கப்படக்கூடிய மக்களின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வில் மிகுந்த கவனம் செலுத்துவதாக உள்ளது. மேலும் அரசாங்க திட்டங்கள், உயிரியல் மருத்துவ கண்டுபிடிப்பு மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றின் பங்குக்கு குறிப்பிட்ட முக்கியத்துவம் அளிக்கிறது.டாக்டர் பட்டாச்சார்யாவின் சமீபத்திய ஆராய்ச்சிகள், கோவிட்-19 தொற்றுநோயியல் மற்றும் தொற்று நோயினால் ஏற்பட்ட பாதிப்புகளில் மிகுந்த கவனம் செலுத்துகிறது. கோவிட்- 19 தொற்று குறித்த சிறந்த விமர்சகராக விளங்கிய இவர், கொரோனா வைரஸ் தொடர்பான பணி நிறுத்தங்களைத் திரும்பப் பெற அழைப்பு விடுத்தது போன்ற முக்கிய முடிவுகளில் பங்காற்றியவர்.டொனால்டு ட்ரம்ப்மருத்துவம், பொருளாதாரம், சுகாதாரக் கொள்கை, தொற்றுநோயியல், புள்ளியியல், சட்டம் மற்றும் பொது சுகாதாரம் மற்றும் பிற துறைகளில் இதுவரை சுமார் 135 ஆராய்ச்சி கட்டுரைகளை வெளியிட்டுள்ளார்.ஏற்கெனவே இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசாமி, அரசாங்கத் திறன் துறையை (DOGE) எலான் மாஸ்க்குடன் சேர்ந்து வழிநடத்துவார் என்று அறிவித்துள்ள டொனால்ட் ட்ரம்ப், மேலும் ஒரு அமெரிக்க இந்தியரை நாட்டின் உயர் பதவிக்கு நியமித்து இந்திய வம்சாவளியினர் பக்கம் பார்வையை திருப்பி உலகை வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.`நான் போடப்போகும் முதல் கையெழுத்து...' - சீனா, கனடா, மெக்சிகோவிற்கு குறி வைக்கும் ட்ரம்ப்!

Nov 27, 2024 - 16:24
 0  2
அமெரிக்கா: NIH இயக்குநராக இந்திய வம்சாவளியை டிக் செய்த ட்ரம்ப் -  யார் இந்த பட்டாச்சார்யா?!

அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் ட்ரம்ப், இந்திய-அமெரிக்க மருத்துவரும், பொருளாதார நிபுணருமான டாக்டர் ஜெய் பட்டாச்சார்யாவை, நாட்டின் தலைசிறந்த சுகாதார ஆராய்ச்சி மற்றும் நிதியளிப்பு நிறுவனமான தேசிய சுகாதார நிறுவனங்களின் (NIH) அடுத்த இயக்குநராக நியமித்துள்ளார்.

1968 இல் கொல்கத்தாவில் பிறந்த ஜெய் பட்டாச்சார்யா , ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் மற்றும் பொருளாதாரத்தில் முனைவர் பட்டமும் பெற்றவர்.

தற்போது ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் சுகாதாரக் கொள்கைப் பேராசிரியராகவும், தேசிய பொருளாதார ஆராய்ச்சிக் கழகத்தில் ஆராய்ச்சி கூட்டாளராகவும் உள்ள டாக்டர் பட்டாச்சார்யா, ஸ்டான்ஃபோர்டின் மக்கள்தொகை, ஆரோக்கியம் மற்றும் முதுமைக்கான பொருளாதார மையத்தை இயக்கி வருகிறார்.

இவரின் ஆராய்ச்சிகள் பாதிக்கப்படக்கூடிய மக்களின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வில் மிகுந்த கவனம் செலுத்துவதாக உள்ளது. மேலும் அரசாங்க திட்டங்கள், உயிரியல் மருத்துவ கண்டுபிடிப்பு மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றின் பங்குக்கு குறிப்பிட்ட முக்கியத்துவம் அளிக்கிறது.

டாக்டர் பட்டாச்சார்யாவின் சமீபத்திய ஆராய்ச்சிகள், கோவிட்-19 தொற்றுநோயியல் மற்றும் தொற்று நோயினால் ஏற்பட்ட பாதிப்புகளில் மிகுந்த கவனம் செலுத்துகிறது. கோவிட்- 19 தொற்று குறித்த சிறந்த விமர்சகராக விளங்கிய இவர், கொரோனா வைரஸ் தொடர்பான பணி நிறுத்தங்களைத் திரும்பப் பெற அழைப்பு விடுத்தது போன்ற முக்கிய முடிவுகளில் பங்காற்றியவர்.

டொனால்டு ட்ரம்ப்

மருத்துவம், பொருளாதாரம், சுகாதாரக் கொள்கை, தொற்றுநோயியல், புள்ளியியல், சட்டம் மற்றும் பொது சுகாதாரம் மற்றும் பிற துறைகளில் இதுவரை சுமார் 135 ஆராய்ச்சி கட்டுரைகளை வெளியிட்டுள்ளார்.

ஏற்கெனவே இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசாமி, அரசாங்கத் திறன் துறையை (DOGE) எலான் மாஸ்க்குடன் சேர்ந்து வழிநடத்துவார் என்று அறிவித்துள்ள டொனால்ட் ட்ரம்ப், மேலும் ஒரு அமெரிக்க இந்தியரை நாட்டின் உயர் பதவிக்கு நியமித்து இந்திய வம்சாவளியினர் பக்கம் பார்வையை திருப்பி உலகை வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist