சின்க்ஃபீல்ட் கோப்பை செஸ்: குகேஷ் - பிரக்ஞானந்தா ஆட்டம் டிரா

கிராண்ட் செஸ் டூரில் இந்த ஆண்டுக்கான கடைசி தொடரான சின்க்ஃபீல்ட் கோப்பை அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் நடைபெற்று வருகிறது

Aug 24, 2024 - 10:07
 0  1
சின்க்ஃபீல்ட் கோப்பை செஸ்: குகேஷ் - பிரக்ஞானந்தா ஆட்டம் டிரா

செயின்ட் லூயிஸ்: கிராண்ட் செஸ் டூரில் இந்த ஆண்டுக்கான கடைசி தொடரான சின்க்ஃபீல்ட் கோப்பை அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இதன் 3-வது சுற்றில் இந்திய கிராண்ட் மாஸ்டரான குகேஷ், சகநாட்டடைச் சேர்ந்த மற்றொரு கிராண்ட் மாஸ்டரான பிரக்ஞானந்தாவை எதிர்கொண்டார். இந்த ஆட்டம் 62-வது காய் நகர்த்தலின் போது டிரா ஆனது.

10 வீரர்கள் கலந்து கொண்டுள்ள இந்த தொடரில் 3 சுற்றுகளின் முடிவில் குகேஷ், பிரக்ஞானந்தா, பிரான்ஸின் மாக்சிம் வாச்சியர்-லாக்ரேவ், அமெரிக்காவின் பேபியானோ கருனா, சோ வெஸ்லி, சீனாவின் டிங் லிரென் ஆகியோர் தலா 1.5 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist