சவுக்கு சங்கர் பேட்டியை ஒளிபரப்பிய வழக்கு: ஃபெலிக்ஸ் ஜெரால்டுக்கு ஐகோர்ட் ஜாமீன் மறுப்பு
சவுக்கு சங்கரின் பேட்டியை ஒளிபரப்பியதாக கைது செய்யப்பட்ட யூடியூப் சேனல் தலைமை நிர்வாகி ஃபெலிக்ஸ் ஜெரால்டுவின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை: சவுக்கு சங்கரின் பேட்டியை ஒளிபரப்பியதாக கைது செய்யப்பட்ட யூடியூப் சேனல் தலைமை நிர்வாகி ஃபெலிக்ஸ் ஜெரால்டுவின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பெண் காவலர்கள், காவல் துறை பெண் அதிகாரிகளை அவதூறாகப் பேசியதாக பதியப்பட்ட வழக்கில் சவுக்கு சங்கர் கைதாகி சிறையில் இருக்கிறார். இதேபோல சவுக்கு சங்கரின் நேர்காணலை சமூக வலைதளங்களில் ஒளிபரப்பியதாக யூடியூப் சேனல் தலைமை நிர்வாகியான ஃபெலிக்ஸ் ஜெரால்டுவும் கைது செய்யப்பட்டார். ஃபெலிக்ஸ் ஜெரால்டு தனக்கு ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
What's Your Reaction?